என்னருகே நீயிருந்தாய்!
காலை நேரத்தில்
காலாற நடந்து போகும்
கடற்கரை மேகங்கள்
காணும் போதும்…..
உன்னைத் தீண்டிய தென்றல்
என் உள்ளம் தீண்டி
உன் வரவு சொல்லிப்
போன போதும்…..
‘என்ன சொல்லிப்
போனது தென்றல்?’
என மரங்கள் எனை
ஏக்கமாய் விசாரித்த போதும்……
அம்சமாய் அசைந்து போகும்
அந்திச் சூரியன் எனை
அருகே அழைத்து- தன்
அனுபவங்கள் சொன்ன போதும்…..
மெலிதான
மழைத்துளிகள் – என்
மேனி நனைத்த போதும்……
எழிலான வானவில்
என் கண்கள் பார்த்து
கவி வாசித்த போதும்……
அரைகுறை ஆடையுடன்
அனுதினமும் உலாவரும்
பால்நிலா எனைப்
பரிவோடு அழைத்து –என்
காதல் கதை
கேட்ட போதும்…….
சொன்னதும்
சுற்றியுள்ள விண்மீன்
கூட்டம் கூட்டிச்
சத்தமாய்ச் சிரித்தபோதும்….
கைகளில் உன் பேரெழுதி
கன்னத்தில் வைத்துக்
கண்மூடும் போதும்……
நீ
எனக்கு
மிக
அருகில்
இருப்பதாய்
உணர்கிறேன்……
என்னருகே நீ இருந்தால் இயற்கையெல்லாம் சுழலுவதேன்? என்பது இதுதானோ!
Vஎர்ய் நிc நொர்ட் டிச்…….