கம்பளிப்புழு (caterpillar) வண்ணத்துப்பூச்சியாக (butterfly) மாறுதல்:
ஒரு பெண் வண்ணத்துப்பூச்சி தன் வாழ்நாளில் நூறு முதல் பல ஆயிரம் மூட்டைகள் வரை இடமுடியும். இந்தப் பெண் வண்ணத்துப்பூச்சி மிகவும் விழிப்புடன், எதிர்காலத்தில் தனது வாரிசுகளுக்குப் பயன்தரக்கூடிய தாவரங்களுக்கு அருகிலேயே, தன் முட்டைகளை இடும்.
இந்த முட்டைகள் பொரித்து புழு போன்ற பூச்சிகள் அதாவது கம்பளிப்புழுக்கள் தோன்றும்; இவை தமது தோல்களைப் பலமுறை உரித்து வெளியேற்றும். கம்பளிப்புழு தான் மாற்றமடைய வேண்டிய நேரம் வருவதை உணர்ந்தவுடன், சிறிய பொத்தானைப் போன்றதொரு பட்டுக்கூட்டை உருவாக்கி அதில் ஒட்டிக்கொள்ளும். பின்னர் தன் கம்பளிப்புழுத் தோலை வெளியேற்றிவிட்டு, ஒரு முட்டைப்புழு/கூட்டுப்புழு (pupa or chrysalis) வடிவில் தோற்றமளிக்கும்.
இந்த முட்டைப்புழு அல்லது கூட்டுப்புழு சில வாரங்கள் அல்லது சில மாதங்களுக்கு உறக்கம் கொள்ளும். இக்காலப் பகுதியில் இது மாற்றங்களை அடைந்து ஓர் அழகான வண்ணத்துப்பூச்சியாக உருவாகிறது. அப்போது தன் இறக்கைகளை விரித்து, அவை உலர்ந்து உறுதியான பின்னர், பறக்கத் துவங்கும்.
இந்தப் பறக்கும் வண்ணத்துப்பூச்சி முன்புறமும் பின்புறமும் பக்கவாட்டிலும் எளிதாகப் பறக்கக் கூடியது; பூவிலிருந்து தேனை உணவாக உட்கொள்ளக் கூடியது.
சிலந்தி வலைகள் (Spider webs):
சிலந்தி தன் அடிவயிற்றின் (abdomen) பின்பகுதியில் அமைந்துள்ள நுண்ணிய குழல் போன்ற குழாயிலிருந்து (nozzle) வெளிவரும் பட்டுப் போன்ற இழைகளைக் கொண்டு தன் வலையைப் (web) பின்னுகிறது. சிலந்தி பட்டை நூலாக நீட்சி அடையச் செய்யும். இந்நூல் எஃகு போன்று வலிமை படைத்ததாக விளங்குகிறது.
இந்த நூல்களில் சில ஒட்டும் தன்மை கொண்டவை; பிற நூல்கள் வலைக்கு ஆதரவாக விளங்குபவை. இரையாக வரும் பூச்சிகள் பறந்து வந்து வலை மீது அமரும்போது, அத்தாக்கத்தின் அதிர்வுகளை (vibrations) சிலந்தி எளிதாக உணரும்; சிலந்தி உடனே விரைந்து சென்று அப்பூச்சிகளை தனக்கு இரையாக்கிக் கொள்ளும். ஆனால், பொதுவாக இரையாக வரும் பூச்சிகள் சிலந்தியால் பிடிக்கப்படும் முன்னரே பட்டு நூலால் சுற்றப்பட்டு சிறைபிடிக்கப்பட்டு விடும்; அதன் பின்னரே சிலந்திக்கு இரையாகும்.
“