விரல் தொட்ட வானம் (18) -அவனையும்

அவனையும்

சப்புக் கொட்டித் தின்கிறாய்
என் மௌனங்களை
ஒரு குழந்தையைப் போல.
அது தரும் ருசியில்
கிறங்கிப் போய்
வேண்டுதல் போடுகிறாய்
இறைவனிடம்
என் மௌனம் நீடிப்பதற்கும்
சுவை சலிக்காமல் இருப்பதற்கும்.
காணிக்கையாய் உண்டியலில்
என்
புன்னகைகளையும் களவாடிப்
போடுவதற்குப் பதிலாய்
நீ தின்றதில் பாதியைத் தந்திருக்கலாம்
அவனுக்கு.
நான் உணர்வதற்கு ஏதுவாய்
அவனையும்.

வெப்பக்காற்று

நீண்ட
போராட்டங்களுக்குப் பிறகு
உள்ளே புகுந்தது
நீர்
குழாய்களின் வழியாக.
வேகமாய்
வெளியேறியது
வெப்பக்காற்று
குடத்தில் இருந்து.

–தொட்டுத் தொடரும்

About The Author

1 Comment

Comments are closed.