நெருப்பு Posted by டி.வி. சுவாமிநாதன் Date: December 07, 2009 in: கவிதை Leave a comment share 0 0 0 0 “நீ யார்?” எனவே வினவிற்று நின்மல மனத்தோர் குழந்தைதன் தாயார் உடலைக் கருக்கிடவே தாவி உயர்ந்த தீக்கொழுந்தை, அன்னை இவளின் வயிற்றுக்குள் அன்றொரு நாள்நடு நிசிபொழுதில் உன்னை உருவாக்கிட மூண்ட உத்வேகம் எனப் பதில்கிட்டும்