சில்லுனு ஒரு அரட்டை

நல்லதே நினைத்தால் நல்லதே நடக்கும்.. எல்லோரும் நல்லதை நினைக்கணும்.. எல்லோருக்கும் நல்லது நடக்கணும்.. நடப்பதெல்லாம் நன்மைக்கே…

என்ன திடீர்னு என்னல்லாமோ சொல்றான்னு பார்க்கறீங்களா? ஒரு குட்டிக் கதை படிச்சேன். படிச்சப்புறம் இதைத் தாரக மந்திரமா ஆக்கிக்கிட்டேன். கதையைக் கடைசியில் சொல்றேன்.

உலகமெல்லாம் பன்றிக் காய்ச்சல் நோயைப் பற்றின பேச்சா தான் இருக்கு. அதெல்லாம் நமக்கு வராதுன்னு யாராலயும் அலட்சியமா இருக்க முடியலை. மின்னஞ்சல்லயும், குறுந்தகவல்கள்லயும் வந்த சில தகவல்களை இங்க பகிர்ந்துக்கிறேன்.

அதுக்கு முன்னாடி, பன்றிக் காய்ச்சலைப் பற்றின முழு விவரங்களும், அறிகுறிகளும் இங்க தரப்பட்டிருக்கு:
http://www.tamiflu.com/about/symptoms.aspx

இந்தியாவில் இதற்கான சிகிச்சை எந்த மருத்துவமனைகளில் கிடைக்குதுன்னா:

GOVERNMENT AUTHORIZED HOSPITALS FOR TREATMENT OF SWINE FLU

Chennai

King Institute of Preventive Medicine (24/7 Service), Guindy, Chennai – 32 (044) 22501520, 22501521 & 22501522
Communicable Diseases Hospital, Thondiarpet, Chennai (044) 25912686/87/88, 9444459543
Government General Hospital, Opp. Central Railway Station, Chennai – 03 (044) 25305000, 25305723, 25305721, 25330300

Pune

Naidu Hospital Nr Le’Meridian, Raja Bahadur Mill, GPO, Pune – 01 (020) 26058243
National Institute of Virology, 20A Ambedkar Road, Pune – 11 (020) 26006290
Kolkata ID Hospital 57,Beliaghata, Beliaghata Road, Kolkata – 10‎ (033) 23701252

Coimbatore

Government General Hospital Near Railway Station, Trichy Road, Coimbatore – 18 (0422) 2301393, 2301394, 2301395, 2301396
Hyderabad Govt. General and Chest Diseases Hospital, Erragadda, Hyderabad (040) 23814939

Mumbai

Kasturba Gandhi Hospital Arthur Road, N M Joshi Marg, Jacob Circle, Mumbai – 11 (022) 23083901, 23092458, 23004512
Sir J J Hospital J J Marg, Byculla, Mumbai – 08 (022) 23735555, 23739031, 23760943, 23768400 / 23731144 / 5555 / 23701393 / 1366
Haffkine Institute Acharya Donde Marg, Parel, Mumbai – 12 (022) 24160947, 24160961, 24160962

Kochi

Government Medical College Gandhi Nagar P O, Kottayam – 08 (0481) 2597311,2597312
Government Medical College Vandanam P O, Allapuzha – 05 (0477) 2282015
Taluk Hospital Railway Station Road, Alwaye, Ernakulam (0484) 2624040 Sathyajit – 09847840051
Taluk Hospital Perumbavoor PO, Ernakulam 542 (0484) 2523138 Vipin – 09447305200

Gurgaon & Delhi

All India Institute of Medical Sciences (AIIMS) Ansari Nagar, Aurobindo Marg Ring Road, New Delhi – 29 (011) 26594404, 26861698
Prof. R C Deka – 9868397464
National Institute for Communicable Diseases 22, Sham Nath Marg, New Delhi – 54 (011) 23971272/060/344/524/449/326
Dr. Ram Manohar Lohia Hospital Kharak Singh Marg, New Delhi – 01 (011) 23741640, 23741649, 23741639
Dr. N K Chaturvedi – 9811101704
Vallabhai Patel Chest Institute University Enclave, New Delhi- 07 (011) 27667102, 27667441, 27667667, 27666182

Bangalore

Victoria Hospital K R Market, Kalasipalayam, Bangalore – 02 (080) 26703294 Dr. Gangadhar – 94480-49863
SDS Tuberculosis & Rajiv Gandhi Institute of Chest Diseases Hosur Road, Hombegowda Nagar, Bangalore – 29 (080) 26631923
Dr. Shivaraj – 99801-48780

பன்றிக் காய்ச்சல் வராமத் தடுக்க சில தற்காப்பு நடவடிக்கைகள்:

• கூட்டமான இடங்களுக்குப் போறதை முடிஞ்சளவு தவிர்த்துடுங்க. அப்படிப் போறதானாலும் முகத்தில் சுத்தமான துணியைக் கட்டிகிட்டுப் போங்க.

• வெளியில் போறதுக்கு முன்னாடியும், வந்த பின்னாடியும் ஒரு குளியல் போட்டுங்க.

• குட்டீஸ் சுகாதாரமான சூழ்நிலையில் விளையாடறாங்களான்னு கவனிச்சுக்குங்க.

• உடம்பு சூடா இருக்கிற மாதிரியோ, சோர்வா இருக்கிற மாதிரியோ இருந்தா எலுமிச்சைச் சாறு குடிங்க (உங்க உடம்புக்கு எலுமிச்சைச் சாறு ஒத்துக்கும்னா மட்டும்). உடம்பில் எதிர்ப்பு சக்தி வளர்க்கிற மாதிரியான சாப்பாட்டை சாப்பிடுங்க.

• தும்மும் போதும் இருமும் போதும் வாயையும் மூக்கையும் மென்காகித்தால (TISSUE) மூடிக்கோங்க. உடனடியா அந்தக் காகிதத்தை அப்புறப்படுத்திடுங்க. கைகளையும் நல்லாக் கழுவிடுங்க.

• உங்க கையால உங்க கண், வாய், மூக்கு இதெல்லாம் தொடாதீங்க. நோய்க் கிருமி பரவ வாய்ப்பிருக்கு.

• நுரையீரல் சம்பந்தப்பட்ட வியாதி உள்ளவங்க பக்கத்தில் நெருங்கிப் போகாதீங்க. யாருக்காவது இந்தக் காய்ச்சலுக்கான அறிகுறி (அறிகுறிகளை மேற்சொன்ன இணையதளத்தில் விவரமாத் தெரிஞ்சுக்கலாம்) இருந்தா அவங்களைத் தனியா இருக்க வைங்க. இதெல்லாம் விட முக்கியமா, உடனடியா மேல சொன்ன மருத்துவமனையில போய் பரிசோதிச்சுப் பார்த்துடுங்க.

உங்களுக்குத் தெரிஞ்சவங்ககிட்ட எல்லார்கிட்டயும் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைச் சொல்லுங்க.

சில சத்தான உணவுகளைப் பத்தித் தெரிஞ்சுக்க: https://www.nilacharal.com/tamil/marun.html

இந்தக் காய்ச்சல் இல்லாம இன்னொன்னும் மக்களைப் பிடிச்சு ஆட்டுதுன்னா, அது "ஆடித் தள்ளுபடி". தி. நகர் ரங்கநாதன் தெருல எள்ளு போட்டு எள்ளெடுக்க முடியலை.. எங்க பார்த்தாலும் மனுஷத் தலை தான். இந்த மாதிரி ஒரு மாசத்துக்கு மட்டுமில்லாம, எப்பவுமே தள்ளுபடி உண்டு நம்ம நிலாஷாப்ல. விவரத்துக்கு இங்க சொடுக்குங்க: http://www.nilashop.com/offers.php

ஆஸ்திரேலியால மரம் வெட்டுறதுக்கு ஒரு இயந்திரம் உபயோகிக்கிறாங்க பாருங்க, இந்தியாவில் எந்த அரசியல்வாதியும் இதை வாங்கிடக் கூடாதுன்னு கடவுள்கிட்ட வேண்டிக்கிறேன்.. நீங்களே பாருங்க, 53 விநாடில அது பண்ற வித்தையை:

http://www.youtube.com/watch?v=KUUnet3OyYM

என்னங்க என் பயம் நியாயம் தான? சந்தன மரக்காடெல்லாம் ஒரே நாள்ல காணாமப் போயிடும்.. (அது சரி, ஹேமா நீங்க இந்த இயந்திரத்தைப் பார்த்துருக்கீங்களா?)

காட்டை அழிக்கிறதைப் பத்திப் பேசும்போது தான் எக்ஸ்னோரா அமைப்போட ‘ஹோம் எக்ஸ்னோரா’ திட்டம் ஞாபகம் வருது. உலக வெப்பமயமாதலைத் தடுக்க இவங்க கையில் எடுத்திருக்கற திட்டங்கள்ல இதுவும் ஒன்னு. "எங்கும் பசுமை.. எதிலும் பசுமை" இது தான் இவங்க இலட்சியம்னு சொல்லலாம்.

"ஹோம் எக்ஸ்னோரா"வோட வீடுகளுக்கான "பூஜ்யக் கழிவு" (Zero waste) செயல்திட்டம் பிரமிக்க வச்சுடுச்சு. எங்க காலனி வளாகத்தில் இந்தத் திட்டத்தைப் பத்தித் தெரிஞ்சுக்க ஒரு கூட்டம் ஏற்பாடு செய்திருந்தாங்க. ஒரு ஞாயிற்றுக்கிழமை காலைல 11 மணி வெயில்ல எழுந்து போணும்னா எப்படி இருக்கும்?  வீட்டுக்கொருத்தர் கண்டிப்பா வரணும்னு சொல்லிட்டதால என்னை அனுப்பிட்டாங்க எங்க வீட்ல. ஐயோன்னு போனவனை ஆஹான்னு சொல்ல வச்சுடுச்சு இந்தக் கூட்டம்.

வீட்டில் சேர்ற சமையல் கழிவுகளை எப்படி மறு சுழற்சி செய்றதுன்னு அவங்க விவரிச்சதில் ஒரு சிறு பகுதியை இங்க சுருக்கமா சொல்றேன்.

தேவையான பொருட்கள்:

மண் தொட்டி – 2
வரட்டி – காய்ந்து போனது 5 (நல்லா தூளாக்கிக்கணும். ஈரப்பசை கூடாது)

செய்முறை:

தினமும் காய்கறிக் கழிவுகளை (காய்கறி வெட்டும் போது மிஞ்சறது) ஒரு தொட்டில (தொட்டி1) போட்டு, ஒரு தேக்கரண்டி சாணித் தூள் தூவணும். இப்படி 30 நாள் ஒரே தொட்டில சேர்த்ததை அடுத்த தொட்டிக்கு(தொட்டி2) மாத்தி 30 நாள் மக்க விட்டுடணும்(எந்த வாடையும் வீசாது). பழைய படி தொட்டி1 ல குப்பையை சேர்க்க ஆரம்பிச்சுடுங்க. 30 நாள் கழிச்சு தொட்டி2 ஐப் பார்த்தீங்கன்னா அந்தக் குப்பையெல்லாம் மக்கி தூளாயிருக்கும். இது தான் நாம மறு சுழற்சி முறையில தயாரிச்சது.

இதை வச்சு என்ன செய்றதுன்னு யோசிக்கிறீங்களா? இது அற்புதமான இயற்கை உரம். முழுக்க முழுக்க இந்த உரத்திலேயே நீங்க காய்கறி விதை தூவி வளர்க்கலாம். இல்லைன்னா ஏற்கனவே இருக்கிற செடிகளுக்கு உரமாப் போடலாம். ரோஜால்லாம் பூத்துக் குலுங்குமாம். காய்கறியெல்லாம் அப்படி ருசியாயிருக்குமாம். முயற்சி பண்ணிப் பாருங்க.

நீ செஞ்சு பார்த்தியான்னு நினைக்கிறது இங்க தெரியுது. எல்லாம் வாங்கி எங்க அம்மாகிட்ட விவரம் சொல்லி ஒரு 6 நாள் சேர்த்திருப்பேன். நான் பொறுப்பா ஒரு வேலை செஞ்சது யாருக்கோ பொறுக்கலை போல.. வீட்டு மராமத்து வேலை பார்க்கிறவங்க இடிச்சுப் போட்ட கல் விழுந்து தொட்டி உடைஞ்சே போச்சு.. வேலை முடியற வரைக்கும் இன்னொரு தொட்டியை எடுக்கக் கூடாதுன்னு உள்ள தூக்கி வச்சுட்டேன். நீங்க எல்லாரும் உங்க வீடுகள்ல சேர்ற கழிவுகளை மறுசுழற்சி பண்ணனும், வீட்டையும் நாட்டையும் சுத்தமா வச்சுக்குனும். யாராவது செயல்படுத்திப் பார்த்து சொன்னீங்கன்னா, மத்தக் கழிவுகளை சுழற்சி பண்றது எப்படின்னு சொல்லுவேன்.

சரி, ‘நல்லதே நடக்கும்’ கதைக்கு வரலாமா….. … … … … … … … … … … … … …ன்னு யோசிச்சேன். ஆனால் நிறையப் பேசிட்டோம். அதனால அடுத்த முறை சொல்றேனே!

அதுவரை உங்களிடமிருந்து விடைபெறுவது,
உங்கள் ஜோ

About The Author

14 Comments

  1. Hema Manoj

    இல்ல ஜோ, நான் இன்னும் கடல் தாண்டல…காட்டை சுற்றி பார்க்க கூட்டனிக்கு ஆள் சேர்த்துகிட்டு இருக்கேன்..அங்க ஏதாவது இந்த மாதிரி இயந்திரத்தை பார்த்தா சொல்லுறேன்…

  2. Jo

    நன்றி பாலகிருஷ்ணன்.. பன்றிக்காய்ச்சலை மீடியாக்கள் தான் ரொம்பவும் பெரிதுபடுத்திக் காட்டுற மாதிரி இருக்கு. உடலில் எதிர்ப்பு சக்தி இருந்தா போதும். இதெல்லாம் அண்டவே அண்டாது. தினம் ஒரு பூண்டு (பச்சையா), வெங்காயம் (பச்சையா), வைட்டமின் சி உள்ள பழங்கள் எடுத்துக்கிட்டா உடம்பில் எதிர்ப்பு சக்தி தானா ஏறிடும். கண்டிப்பா இரவில் 8 மணி நேரம் தூங்கணும். இதை நம்மால செய்ய முடியும் தானே..

  3. maayan

    ஜோ!
    பன்றிக்காய்ச்சலுக்கு சிகிச்சைக்கான இடங்களையும் குடுத்துறிக்கீங்க, நல்ல் விஷயம்தான்.

    // யாருக்காவது இந்தக் காய்ச்சலுக்கான அறிகுறி (அறிகுறிகளை மேற்சொன்ன இணையதளத்தில் விவரமாத் தெரிஞ்சுக்கலாம்) இருந்தா அவங்களைத் தனியா இருக்க வைங்க.//

    ஆனா, பன்றிக்காய்ச்சல் உள்ளவங்கள தனிமைப்படுத்தாம அவங்களுக்கு மாஸ்க் அணிவிச்சுக்கிட்டாலும் தப்பில்லைன்னு நினைக்கிறேன்.

    தி-நகர்ல எள்ளு போட்டா எந்த காலத்திலையும் எடுக்க முடியாது. ஏன்னா அவ்வளவு குப்பைகள் அங்கே.

  4. maayan

    //ஆஸ்திரேலியால மரம் வெட்டுறதுக்கு ஒரு இயந்திரம் உபயோகிக்கிறாங்க பாருங்க, இந்தியாவில் எந்த அரசியல்வாதியும் இதை வாங்கிடக் கூடாதுன்னு கடவுள்கிட்ட வேண்டிக்கிறேன்..//
    ஜோ,
    இன்றைய காலகட்டத்தில எந்த அரசியல்வாதிக்கு அதுக்கெல்லாம் நேரம் இருக்கு. கட்சிக்கு ஓட்டு சேகரிக்கவும், சட்டமன்றத்துலபோஇ தூங்கிட்டுவருவதற்குமே(எல்லோரையும் சொல்லவில்லை) நேரம் சரியாக இருக்கிறது. இப்பொழுது மட்டும் அந்த வீரப்பன் இருந்து இதைப்பற்றி கேள்விப்பட்டான்னென்றால், காட்டையே சூரையாடியிருப்பான் அவ்வளவு வேகம்!

  5. maleek

    நம் மாணவர்களைத்தான் படுத்துகிறார்கள் என்றால் மரங்களையுமா இப்படி
    படுத்துவார்கள்!

  6. Jo

    மாயன், மாஸ்க் விக்கிற விலையில, 4 மணி நேரத்திற்கு ஒரு முறை மாத்திட்டிருக்க முடியுமா? அது மட்டுமில்லாம, கொஞ்சம் தனிமையில் இருந்தா, ரெஸ்ட் எடுத்த மாதிரியும் இருக்கும், சுகாதாரமாவும் இருக்குமில்லையா?

    தி.நகர் பத்தி நீங்க சொன்னது மகா உண்மை. இப்ப மழை வேற ஆரம்பிச்சிடுச்சு. அங்க நடக்கக்கூட முடியாது. மக்களுக்கு இது நம்ம ஊரு. நாம தான் சுத்தமா வச்சுக்கணும்னு நினைப்பு வரணும்.

  7. Jo

    ஆஸ்திரேலியாவில் காடுகள் அதிகம் மாலீக். வீடுகளும் மரப் பலகைகளில் தான் பெரும்பாலும் கட்டப்பட்டிருக்கும். அதனால அவங்க ஊரில் இந்த இயந்திரம் தேவை தான்.

  8. Rishi

    ஜோ
    உரம் மேட்டர் சூப்பர்…
    இதுமாதிரி சங்கரன்கோவில்ல இருந்தப்போ நாங்க செஞ்சிருக்கோம். ஆனா தொட்டி இல்லை… பெரிய உரக்குழியே போட்டிருக்கோம். 27 ஏக்கர் தோட்டத்தை எங்க தாத்தாதான் மேற்பார்வை பார்த்தார். அங்கே கிடைக்கிற பலவகையான கழிவுகளையும் கிடங்குல போட்டு சாணியை போட்டு மெத்தி, மக்கின பிறகு மண்வெட்டியால குழியைத் தோண்டினா… பார்க்கணும்.. புழுக்கள் கலர் கலரா வரும்..பெருசு பெருசா வரும்… சிகப்பு, ரோஸ் மாதிரி கலர், செம்பழுப்பு, வெளிர்மஞ்சள்… உவ்வேக்க்.. அதோட.. சராசரிக்கும் நீளமான மண்புழுக்கள்… எல்லா உரத்தையும் கொண்டுபோய் வயல்ல தூவிவிடுவோம்.. அருமையான விவசாயம்!

  9. Rishi

    //உலகமெல்லாம் பன்றிக் காய்ச்சல் நோயைப் பற்றின பேச்சா தான் இருக்கு. //

    அனேகமா பன்றிகள் உலகத்தில் வேறு பேச்சு நிகழ்ந்து கொண்டிருக்கலாம்…
    இந்தப் பாழாப் போன மனுஷனுங்க போடற சாணி முன்ன மாதிரியெல்லாம் இல்ல.. ஒரே வைரஸ்… சாப்பிட முடியல்ல.. சை!!””

  10. maleek

    எலி,கொசு,எறும்பு,கொக்கு,காக்கா,பன்றி…..ரிஷி வேலை
    எங்கே வண்டலூர் பக்கமா?

  11. Rishi

    அட்டவணை போட்டு சொல்றீங்க..மாலீக். ரொம்பத்தான் ஞாபகசக்தி உங்களுக்கு!!

  12. R.V.Raji

    ஜோ!…
    நல்ல உபயோகமான தகவல்களை தந்திருக்கீங்க…நன்றி..
    ஒரு சின்ன சந்தேகம். நீங்க கொடுத்திருக்கிற டிப்ஸையெல்லாம் பன்றிக் காய்ச்சல் இல்லாதவங்க யூஸ் பண்ணினா என்ன ஆகும்?

  13. Jo

    ராஜி,

    //தினம் ஒரு பூண்டு (பச்சையா), வெங்காயம் (பச்சையா), வைட்டமின் சி உள்ள பழங்கள் எடுத்துக்கிட்டா உடம்பில் எதிர்ப்பு சக்தி தானா ஏறிடும். கண்டிப்பா இரவில் 8 மணி நேரம் தூங்கணும்.//

    இதெல்லம் எதிர்ப்பு சக்தி அதிகமாகறதுக்கு தான். எதிர்ப்பு சக்தி அதிகமானா, எந்த நோயும் அண்டத் தயங்குமே!

Comments are closed.