கவின் குறு நூறு-14

39

‘குருவி நம்மைப் போல
பொங்கல் கொண்டாடுமா?’
கேட்ட குழந்தைக்கு அம்மாவிடமிருந்து
பொங்கல் தான் கிடைத்தது
பதில் கிடைக்கவில்லை!

40

உடைத்துக் கவின் உதிர்க்கும்
பொம்மைத் துண்டுகளில் பூக்கும் புதுப் புது
வடிவங்களைத் திரட்டிச் சேர்க்கக்
கடும் போட்டி சிற்ப உலகில்.

41

அப்பாவிடம் கவின் கேட்டான்
‘ஆகாயத்தில் சூரிய விளக்குச்
‘சுவிட்ச்’ எந்த இடத்தில் இருக்கிறது?’

42

கவின் வரைந்த வடிவத்தில்
தான் இல்லையே என்று
உடைந்து போனது குடம்.

About The Author

1 Comment

  1. P.K.Sankar

    கவிதைகளில் கற்பனை கொடி கட்டி பறக்கிறது.41-ஆம் கவிதையில் 2ஆவது
    வரியில் விளக்குச் ” என்பதற்கு பதிலாக ” விளக்குக்கு” என்று இருந்திருக்கலாம்.
    என்ன சரிதானே

Comments are closed.