பயற்றம்பருப்பு அல்வா

தேவையான பொருட்கள்:

பயற்றம் பருப்பு – 1 கோப்பை
கெட்டியான பால் – 1 கோப்பை
சர்க்கரை – 1 ½ கோப்பை
நெய் – ½ கோப்பை
பாதாம் பருப்பு – ½ கோப்பை
முந்திரி – சிறிதளவு
திராட்சை – சிறிதளவு
ஏலப்பொடி – ½ தேக்கரண்டி
குங்குமப்பூ – சிறிதளவு

செய்முறை:

பயற்றம் பருப்பை நன்றாகக் கழுவி விட்டு ஐந்து, ஆறு மணி நேரம் ஊற வையுங்கள். பிறகு, நீரை வடித்து விட்டு அத்துடன் முந்திரிப் பருப்பையும், ஊற வைத்து உரித்த பாதாம் பருப்பையும் சேர்த்து ரவை பதத்தில் அரைத்துக் கொள்ளுங்கள். அதனுடன் சர்க்கரையைச் சேர்த்து நன்றாகக் கலந்து விட வேண்டும்.

பிறகு, அடுப்பில் வாணலியை வைத்து, சிறிது நெய்விட்டு, கலவையை அதில் கொட்டிக் கிளறுங்கள். பாதி வெந்தவுடன் சிறிது சிறிதாக நெய் சேர்த்துக் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். அல்வா பதமாகச் சுருண்டு வந்ததும் நெய்யில் வறுத்த முந்திரித் துண்டுகள், திராட்சை, குங்குமப்பூ சேர்த்துக் கலந்து பரிமாறலாம்.

இந்தப் புதிய இனிப்பைச் சுவைத்துப் பாருங்கள்! உங்கள் அனுபவத்தை மறவாமல் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!

About The Author