அன்பு மிகுந்த நிலாச்சாரல் வாசகர்களுக்கு..
உங்களப் போல ஒரு வாசகியோட சின்ன விண்ணப்பம். காது கொடுத்து கேப்பீங்கன்னு தெரியும். என்ன சொல்வது எப்படி சொல்வதுன்னு தெரியாம எழுத ஆரம்பிச்சிருக்கேங்க. கடிதத்துக்கு சம்பிரதாயம் எல்லாம் தேவை இல்லங்க
உங்கள மாதிரியே நானும் நிலாவின் அறிவிப்பைக் கேட்டு அதிர்ந்து உறைந்து போயிட்டேங்க.. எந்த லாபமும் எதிர்பாக்காம..தொண்டுள்ளத்தோடு..தொடங்கின ஒண்ணு சட்டுனு எதிர்பாரக்காம நின்னு விடப் போகுதுன்னா,, அந்தத்..தன்னலமற்ற தொண்டுள்ளத்துக்கு என்ன மதிப்பு இருக்கு?அந்த நல்ல உள்ளங்களுக்கு என்ன அடையாளம் இருக்கு? என் மனசுல இந்தக் கேள்விகள் ஒலிச்சுட்டே இருக்கும் போதுதான், பின்னூட்டம் மூலமா நிலாச்சாரல் மேல நீங்க வச்சிருக்கும் அன்பையும், ஆதரவையும், அபிமானத்தையும் புரிஞ்சுக்கிட்டேங்க. இத்தனப் பேரோட ஆதரவு இருக்கும் போது..எப்படி தோத்துப் போக முடியும்? அதனாலதான் பின்னூட்டத்தின் மூலமா உங்களைச் சந்திக்காம, நேரடியாவே என் ஐடியாக்களோட சந்திக்க வந்திருக்கேங்க!
நிலாச்சாரல் என்கிற இணைய இதழ் தனிப்பட்ட ஒருத்தரோட சொத்து இல்லீங்க.லாபம் சம்பாதிக்கும் நிறுவனமும் இல்லீங்க. தன்னார்வத் தொண்டுள்ளம் கொண்ட ஒருத்தரால உருவாக்கப்பட்டு..அதே மாதிரி தொண்டுள்ளம் கொண்ட வாசகர்களாகிய நம்மாளல வளர வேண்டிய இதழுங்க.அப்போ இதை நிறுத்தாம காப்பத்த வேண்டிய கடமை நமக்கு அதிகமாவே இருக்குங்க. அதனால நிறுத்திடப் போறாங்கன்னு வருத்தப்படுவத விட்டுட்டு என்ன பண்ணலாம்னு கொஞ்சம் யோசிப்போமா? அப்பாடா இப்பதான் மேட்டருக்கு வந்திருக்கேன்.
1.உங்களில் எத்தனையோ பேருக்கு இலக்கியம், அறிவியல், ஆன்மீகம், சமையல், கைவேலை, தையல்,ஓவியம்..இப்படி பல விஷயங்களில் ஆர்வம் இருக்கலாங்க.அத எப்படி வெளியுலகத்துக்குக் காட்டுவதுன்னு தெரியாம இருப்பீங்க, இல்லையா?..உங்க ஆர்வத்தையும்,அறிவையும் எழுத்து மூலமா வெளிக்கொண்டு வாங்க..நிலாச்சாரலுக்கு அனுப்புங்க..
2.உங்களுக்குக் கொஞ்சம் அதிகமாகத் தமிழ்ப்புலமை இருக்கிறதா?கொஞ்சம் கணிணி பயிற்சியும் இருக்கா?நிலாச்சாரலுக்காக தினசரி ஒரு மணிநேரம் ஒதுக்க முடியுமா..? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் யெஸ்..யெஸ்,,யெஸ் என்றால்..நீங்க நிலாச்சாரல் கட்டுரைகளை ப்ரூஃப் ரீட் செய்யலாமே!
3.உங்களுக்கு அசாத்திய கற்பனைத் திறனும்,வித்தியாசமா சிந்திக்கும் ஆற்றலும் இருக்கா..? வாங்க..நிலாச்சாரலை எப்படி இன்னும் புதுமையாக்கலாம்ன்னு பட்டியலிடுங்க
4. ‘இலக்கியம் எல்லாம் வேண்டாங்க..கம்ப்யூட்டரோடுதான் விளையாடுவேங்க,’ன்னு சொல்றீங்களா..உங்க சேவையும் நிலாச்சாரலுக்குத் தேவைங்க..
என்ன பண்ணுங்கன்னா உடனடியா நிலாச்சாரல் இணையதளத்துல இருக்கிற தன்னார்வத் தொண்டர் (volunteer)என்பதில் கிளிக் செய்து உங்களைப் பத்தி விவரங்கள பதிவு செய்யுங்க. நிச்சயம் நிலாச்சாரல் புதுப்பொலிவோட வலம் வருங்க..இரண்டு கைகளும் சேர்த்து தட்டினால் தான் ஓசை என்பது நமக்குத் தெரியாதா என்ன?
வாங்க..சேவை மனப்பான்மையோட வளர்ப்போம்..வளர்வோம் வாங்க
வணக்கம்
நிலாச்சாரல் வாசகி
சித்ரா
னான் ஏட்கனவெ வொலுன்டேர் ஆக பதிவு செய்துல்லேன். ப்ரோf ரெஅடிங் செய்ய விருப்பம். கட்டுரை எழுதவும் ஆர்வம். பதிலுக்கு காத்திருக்கிரேன்.