அது ரஷ்யாவும், சீனாவும் அரசியல் ரீதியாக பகை பாராட்டியிருந்த நேரம். இரண்டு நாடுகளும் ஒன்றை ஒன்று ராணுவ பலத்தால் அழித்து விடுவதாக சவாலிட்ட சமயம். க்ரெம்லின் மாளிகைக்கு ஒரு பெரிய பார்சல் வருகிறது. ரஷ்ய அதிபர் பிரெஸ்னேவ் அதைத் திறக்கிறார். ஒரு பை முழுவதம் பீன்ஸ் விதைகள்.
அதோடு சீனாவின் மாவோவிடமிருந்து ஒரு கடிதம். "இப்படித்தான் படை படையாக உங்களை வந்து தாக்குவோம்" என்று கடிதத்தில் கூறப்பட்டிருக்கிறது.
பிரெஸ்னேவ் உடனே பதிலுக்கு ஒரு பெரிய பையில் கோதுமை மாவை பார்சலில் சீனாவிற்கு அனுப்புகிறார். அதனுடன் இணைப்பாக ஒரு கடிதம். "இப்படித்தான் உங்கள் படையைப் பொடிப் பொடியாக்கி விடுவோம்”
ஒரு அமெரிக்க ராணுவப் பயிற்சி முகாம். விமானப்படை வீரர்கள் விமானத்திலிருந்து பாரசூட் மூலம் கீழே குதிக்க வேண்டும்.
ஒரு வீரன் பதற்றத்துடன் சொன்னான். "தலைவரே, எனது பாரசூட் திறக்க மாட்டேன் என்கிறது"
தலைவர் சொன்னார். " கவலைப்படாதே! இது வெறும் பயிற்சிதானே!"
கிழக்கு ஜெர்மனி வீரர்கள் ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்கள். பல ஆண்டுகள் பல நாடுகளுடன் போரிட்டு அவர்களுக்கு யார் நண்பர்கள், யார் விரோதிகள் என்பதிலேயே குழப்பம் இருந்தது. கமாண்டர் ஒரு வீரனைக் கூப்பிட்டு, "ஒரு அமெரிக்கன் ஒரு ரஷ்யன் இருவரைப் பார்த்தால் முதலில் யாரைச் சுடுவாய்?" என்று கேட்டார்.
இப்போது அமெரிக்கா விரோதியா, இல்லை.. ரஷ்யா விரோதியா எனத் தெரியாமல் குழப்பத்தில் இருந்த அந்த வீரன் "ரஷ்யனை" என்றான்.
கமாண்டர், " நீ ஒன்றுமே தெரியாத முட்டாளாயிருக்கிறாயே! நான் உனது இடத்தில் இருந்தால் அமெரிக்கனைத்தான் கொல்வேன்" என்றார்.
அந்த வீரன், "அப்படியே இருந்தாலும் நான் கொல்வதற்கு அந்த ரஷ்ய வீரன் இருப்பான்.. இல்லையா?" என்று அப்பாவித்தனமாகச் சொன்னான்.
ஒரு முறை ஹங்கேரிய ஜனாதிபதி ஜனோஸ் கத்தாரும் ரஷ்ய அதிபர் பிரெஸ்னேவும் தத்தமது நாட்டு வீரர்கள்தான் சிறந்தவர்கள் என்று ஒருவருக்கொருவர் விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.
ரஷ்ய அதிபர், "சோவியத் வீரர்கள்தான் சிறந்தவர்கள். சோவியத் வீரன் முதலில் சிந்திக்கிறான், பிறகு செயல்படுகிறான்" என்று கூறினார்.
ஹங்கேரி அதிபர், "இல்லை.. இல்லை. எங்கள் நாட்டு வீரர்கள்தான் சிறந்தவர்கள். எங்கள் வீரர்கள் முதலில் செயல்படுவார்கள், பிறகுதான் சிந்திப்பார்கள்" எனக் கூறினார்.
அவர்கள் இருவரும் இப்படியே விவாதித்துக் கொண்டிருக்க, இரண்டு நாட்டு வீரர்களையும் அழைத்து சோதித்துப் பார்த்துவிடுவது எனப் பந்தயம் கட்டினார்கள்.
பிரஸ்னேவ் தனது வீரனை அழைத்து, "வீரனே, இதோ இங்கிருப்பது ஹங்கேரிய ஜனாதிபதி ஜனோஸ் கத்தார். அவரை சென்று தாக்கு" என்றார். சோவியத் வீரன் சற்றே யோசித்து, "இல்லை, என்னால் நம் நாட்டு நண்பரைத் தாக்க முடியாது" என்றான். ஹங்கேரிய ஜனாதிபதி தனது வீரனிடம் "இதோ, இங்கிருப்பது சோவியத் அதிபர் ப்ரெஸ்னேவ். அவரை உடனே சென்று பலமாகத் தாக்கு" என்றார். அந்த வீரனும் சற்றும் யோசிக்காமல் உடனே பிரஸ்னேவை பலமாகத் தாக்கியதில் அவர் சற்று தள்ளிக் கீழே விழுந்தார்.
அந்த வீரன் கதவு வரை சென்று ஏதோ சிந்திக்கத் தொடங்கினான். தான் பந்தயத்தில் வெற்றி பெற்றோம் என்ற களிப்பில் இருந்த கத்தார், அந்த வீரன் போகாமல் இருப்பதைப் பார்த்து, "ஏன் நிற்கிறாய் போகாமல்? என்ன சிந்தனை உனக்கு? என்னைப் பந்தயத்தில் ஜெயிக்க விடமாட்டாய் போலிருக்கிறதே" என்றார் எரிச்சலுடன்.
அந்த வீரன் சொன்னான், "இல்லை.. தாக்கியது போதுமா அல்லது உதைக்கவும் வேண்டுமா" என்றுதான் யோசிக்கிறேன் என்றான்.
ஒரு ரஷ்ய உளவு விமானம் அலாஸ்கா அருகில் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதிலுள்ள விமான ஓட்டியை அமெரிக்க ராணுவத்தினர் பிடித்து விசாரித்தனர். விசாரணை செய்த அமெரிக்க அதிகாரி ரஷ்ய விமான ஓட்டியிடம், ரஷ்யப் போர் விமானம் மிக் 29ஐப் பற்றி விளக்கிக் கூறுமாறு கேட்டார். எத்தனை முறை திரும்பத் திரும்பக் கேட்டாலும் அந்த விமான ஓட்டி தனக்குத் தெரியாது என்றே பதிலளித்தான். அடித்து உதைத்துக் கேட்டும் பிரயோசனமில்லை. அமெரிக்கர்களே களைத்துப்போய் அந்த விமான ஓட்டியை ரஷ்யாவிற்கே திருப்பி அனுப்பிவிட்டார்கள்.
ரஷ்யா சென்ற அவன் தனது சக விமான ஓட்டிகளிடம் சொன்னான். "மிக் 29ஐப் பற்றி நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள். அது தெரியாமல் அமெரிக்கப் படைகளிடம் பிடிபட்டால் நன்றாக உதை வாங்க வேண்டி வரும். எனக்கு அது பற்றி தெரியாததால் என்னை நொறுக்கியே விட்டார்கள்"
“
இட்ச் வெர்ய் வெர்ய் fஉன்ன்ய்
வெர்ய் கோட் ஜொக்ச் அல்ல்க்னிcஎ,,,
னல்லது.