இரண்டு விஷப் பாம்புகள் பேசிக்கொண்டன.
முதல் பாம்பு : "எனக்கு என்னவோ என்னிடம் விஷம் இல்லை என்று தோன்றுகிறது."
இரண்டாவது பாம்பு : "ஏன் அப்படிச் சொல்றே?"
முதல் பாம்பு : "பின்னே! நான் என் உதட்டைக் கடிச்சுக்கிட்டேன். எனக்கு ஒன்னுமே ஆகல்லையே!"
பள்ளிக்கூடம் ஆரம்பித்து முதல் நாள் தலைமை ஆசிரியர் ஒவ்வொரு வகுப்பாக நுழைந்து பார்த்தார். ஒரு வகுப்பில் ஒரே சத்தமும் கும்மாளமும், அங்கே நடுவே நின்று சத்தம் போட்டுக் கொண்டிருந்தவனைக் கடிந்து கொண்டு, "நான் சொல்லும் வரையில் வெளியே நிற்க வேண்டும்" என்றார்.
பிறகு மாணவர்களிடம் எப்படி அமைதியாக நல்ல பிள்ளைகளாகப் பெயர் எடுக்க வேண்டும் எனப் பாடம் சொல்லிவிட்டு, "எங்கே, உங்கள் வகுப்பு ஆசிரியர்?" என்று கேட்டார்.
அப்போது பையன்கள் கோரசாகச் சொன்னார்கள் : "அவரைத்தான் சார், நீங்கள் வெளியே அனுப்பி விட்டீர்கள்"
நோயாளி : "நான் பிழைப்பேனா டாக்டர்?"
டாக்டர் : "100 சதவிகிதம் நிச்சயமாக. இந்த வியாதி வந்தவர்களில் பத்துக்கு ஒன்பது பேர் இறந்து விடுவார்கள். ஏற்கனவே என்னிடம் சிகிச்சை பார்த்த ஒன்பது பேர் இறந்து விட்டார்கள். பத்தாவது ஆள் நீதான்."
மனைவி (கணவனிடம்) : "எத்தனை முறை சொல்லியிருக்கிறேன்? சாப்பிட லேட்டாக வராதீர்கள் என்று!"
கணவன் : "சாரி, நான் கணக்கு வைத்துக் கொள்ளவில்லை."
"உங்களைச் சுற்றி உலகம் சுழல்வதுபோல் தோன்றுகிறதா? அது காதல் என்று தப்பாக நினைக்காதீர்கள்! உங்கள் ரத்த அழுத்தம் ஏறியிருக்கிறது, அவ்வளவுதான்!"
உங்கள் செல்போனுக்குப் பேசும்போதெல்லாம் ‘காட்டு வலையத்திற்கு வந்ததிற்கு நன்றி. நீங்கள் பேச முயற்சி செய்யும் குரங்கு இப்போது மரத்தின் மேலிருக்கிறது. சிறிது நேரம் கழித்து முயற்சிக்கவும்’னு செய்தி வருதே?
“