1993 ஆம் ஆண்டு சிவசங்கர் பாபா பாரதீய வித்யா பவனில் வைத்து சம்ரட்சணாவை துவக்கிய போது சில கருத்துக்களை சொன்னார்.
Pandian Chemicals என்று மதுரையில் ஒரு company இருக்கிறது. அந்த company ownerஐ எனக்கு வேண்டிய ஒரு நண்பர் பார்த்து, "திருநெல்வேலிக்கு ஸ்ருங்கேரி மடாதிபதி வருகிறார். அவருக்கு பட்டினப் பிரவேசம் பண்ண வேண்டும் என்று வசூல் பண்ணிக் கொண்டிருக்கிறோம்", என்றார். அதற்கு அவர், "ஏலே, இந்த சாமியானுங்களை சாமியானுங்களா இருக்க விடுங்கடா", என்று சொன்னார்.
அதற்கு என்ன அர்த்தம்? கோடியில் ஒருவன் தான் பெண்டாட்டி, பிள்ளை குட்டி எல்லாம் வேண்டாம் என்று எல்லாவற்றையும் விட்டு விட்டு சாமியாகிறான். யாரோ ஒருவனுக்கு தான் அந்த பக்குவம் வருகிறது. அற்றது பற்றெனில் உற்றது வீடு என்கிற நிலையில் அவன் எல்லா பற்றுக்களையும் விட்டு விட்டு ஒரு கயிறு அறுந்த காற்றாடியைப் போல இந்த உலகத்திற்காக உழைக்க ஓடி வருகிறான்.
அவனிடம் பத்து பணக்காரர்கள் போய் அவன் விட்டு விட்டு வந்த ஒரு பங்களாவிற்கு பதில் எட்டு பங்களா வாங்கிக் கொடுத்து விடுகிறார்கள். AC Car வாங்கிக் கொடுத்து விடுகிறார்கள்.
அப்பொழுது கபடியில் அமுக்குகிற மாதிரி, கோழியை அமுக்குகிற மாதிரி தப்பிக்க இருந்த ஒரே ஒரு ஆத்மாவையும் இவர்கள் எல்லோரும் சேர்ந்து அமுக்கி விடுகிறார்கள். அப்படி இருந்தால் எப்பொழுது தான் இந்த நாட்டிற்கு நல்ல சாமியார் கிடைப்பான்?
அதனால் நான், "லௌகீகத்தில் இருக்கக்கூடிய நீங்கள் ஆன்மீகவாதிகளாகிய எங்களுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்தால், "Please do not pollute us" என்ற golden words ஐ" அந்த மேடையில் சொன்னேன்.
பரமாச்சாரியார், ஒரு மடத்துக்கு சொத்து என்பது அந்த மடாதிபதியினுடைய யோக்கியதை ஆகும், என்று சொல்கிறார். அந்த மடாதிபதியின் யோக்கியதை தான் மடத்தினுடைய பொக்கிஷம்.
அன்றன்றைக்கு இருப்பதை செலவழித்து விட்டு ஒரு மனைப்பலகையை தலைக்கு வைத்துக் கொண்டு படுத்துக்கொள். ஏதாவது நடக்க வேண்டும் என்றால் அம்பாள் கொண்டு வந்து காசு கொடுப்பாள் என்று சொல்வார்.
அதனால் இன்றைக்கு சிவசங்கர் பாபா எல்லாவற்றையும் ஒழித்துக் கட்டிய ஒரு ஆன்மீகத்தை சாதித்துக் காட்டி விட்டார். நிதி வசூல், உண்டி குலுக்குவது போன்ற எதுவுமே இல்லாத ஒரு ஆன்மீகத்தை நிலை நாட்டி விட்டார். நான் என்னுடைய உழைப்பினாலும் அறிவினாலும் ஈட்டுகிற பணத்திற்கு உனக்கு கணக்கு படித்துக் காண்பித்துக் கொண்டிருக்கிறேன்.
இந்த நிலை ஆன்மீகத்தில் இருக்கும் எல்லா மடாலயங்களுக்கும் வர வேண்டும். இந்த உணர்வு எல்லா மடாதிபதிகளுக்கும் வர வேண்டும். அப்பொழுது தான் இந்த நாட்டில் ஆன்மீகம் வளரும்.
“