சிரிப்பு – சிறந்த மருந்து (1)

ராமு: "எனக்கு பயங்கரமா தலைவலிக்கிறது"
நித்யா: "எனக்குக் காரணம் தெரியும்!"
ராமு: "என்ன காரணம்?"
நித்யா: "நான் நேத்திக்கு வயத்து வலின்னு அம்மாகிட்ட சொன்னேன். அம்மா வயத்துல ஒன்னும் இல்லாததுதான் காரணமாயிருக்கும்னு சொன்னாள். உனக்கும் அப்படித்தான் இருக்கும்!"

*****

அம்மா: "உனக்கு வெட்கமாயில்லை? உன்ஃப்ரனட் மேல இப்படிக் கல்லை வீசலாமா?"
மகன்: "முதல்ல அவன்தான் வீசினான். அப்புறமாத்தான் நான்…."
அம்மா: "நீ அப்படி செஞ்சுருக்கக்கூடாது. அவன் கல் எறிஞ்ச உடனே என் கிட்ட வந்து சொல்லியிருக்கனும்."
மகன்: "உன்னால என்ன செய்ய முடியும்? நான் உன்ன விட நல்லாக் குறிபார்த்து எறிவேனாக்கும்."

*****

அப்பா: "என் பையன் பேனாவை முழுங்கிட்டான். இப்போ என்ன செய்யறதுடாக்டர்?"
டாக்டர்: "நான் வர வரையில பென்சில்ல எழுதுங்க…."

*****

அவர் தனது தோட்டத்தில் செடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார். அப்போது அடுத்த வீட்டுப் பெண் அவர்களது வீட்டுத் தபால் பெட்டியைத் திறந்து பார்த்துக் கொண்டிருந்தாள். ஒன்றும் தபால் இல்லை என்று திரும்பிய அவள் சிறிது நேரம் கழித்து மறுபடியும் தபால் பெட்டியைத் திறந்து பார்த்தாள். இது மூன்றாவது முறையும் தொடர்ந்தது. இந்த முறை ‘சனியன்’ என்று திட்டியவாறே கோபத்துடன் தபால் பெட்டியை மூடினாள்.

அவர் அந்தப் பெண்னிடம், "என்ன ஆயிற்று?" என்று கேட்க அவள், "பின்னே பாருங்கள், கம்ப்யூட்டரில் உனக்கு மெயில் வந்திருக்கிறது எனச் செய்தி வருகிறது, ஆனால் தபால் பெட்டியைத் திறந்தால் ஒன்றையும் காணோம்"என்று சொன்னாள்.

*****

ஆசிரியர்: "ஜான், ஏன் நீ தரையில உட்கார்ந்து கணக்குப் போடறே?"
ஜான்: "நீங்கதானே கணக்குப் போடறத்துக்கு டேபிள்ஸ் உபயோகப்படுத்தக் கூடாதுன்னு சொன்னீங்க."

*****

About The Author