வணக்கம் நண்பர்களே!
எப்படி இருக்கீங்க? நான் நல்லாருக்கேன். (நான் எப்படி இருக்கேன்னு கேட்டீங்கதானே?)
இந்தத் தடவை அரட்டைக்கு பரபரப்பு செய்தி ஏதும் கிடைக்கலை. அடிக்கடி பரபரப்பு செய்தி கேட்டுட்டேயிருந்தா, ஒரு கட்டத்தில் எல்லா செய்தியும் சலிச்சுப் போய்டும். வட இந்திய செய்தி ஒளிபரப்பு அலைவரிசைகளைப் பார்க்கும் போது சிலசமயம் இந்த மாதிரிதான் சலிப்பு ஏற்படுது. அவங்களுக்கு என்னன்னு தெரியலை. பலசமயம் தென்னிந்திய மாநிலங்களை, குறிப்பா தமிழகத்தை, அதன் தலைவர்களைத் தாக்கற மாதிரி செய்தி ஒளிபரப்பறாங்க. அவங்க செய்திகளைத் தர்றதில்லை. மாறா செய்திகளை உருவாக்கறாங்கன்னு தோணும் (இப்ப தென்னிந்திய ஒளிபரப்புகளும் இவங்க வழியை பின்பற்றுற மாதிரித் தெரியுது). என்ன மாதிரியே ராம் கோபால் வர்மாவும் யோசிச்சாரு போல. இந்தக் கருத்தை மையமா வச்சு ஒரு ஹிந்திப் படம் எடுத்திருக்காரு – ரண் (ரணம் – உத்தேச மொழிபெயர்ப்பு!!). நச்சுன்னு இருக்கு படம். இன்னைக்கு ஒளிபரப்பு நிறுவனங்கள் என்ன பண்றாங்கன்னு நம்ம கண் முன்னாடி கொண்டு வந்து நிறுத்திருக்காரு. வாய்ப்பு கிடைச்சா படம் பார்த்துட்டு நீங்க என்ன நினைக்கறீங்கன்னு சொல்லுங்க.
ஐ.பி.எல் ஆரம்பிச்சு வெற்றிகரமா ஓடிட்டிருக்கு. என்ன படம் ஓடுற மாதிரி சொல்றேன்னு பார்க்கறீங்களா? வேற என்னத்த சொல்ல? தோக்கறவன் ஜெயிக்கிறான், ஜெயிக்கறவன் தோக்கறான். எல்லாம் கண்கட்டி வித்தையா இருக்கு. ஆனாலும் இந்த கண்கட்டி வித்தையில இது வரை வரவு எவ்வளவு தெரியுமா?? 1,90,00,00,00,000 ரூ. எத்தனை கோடிடிடிடிடிடிடிடிடிடிடிடி.. ம்.. கோடில்லாம் சர்வ சாதாரணமாயிடுச்சு. இந்தக் கண்கட்டி வித்தையில் நம்ம கங்குலியோட சாகசத்தைப் பார்க்கலாமா?
http://www.youtube.com/watch?v=Q7qxN7VRqbs
இதென்ன பெரிசு! இதைப் பாருங்க:
http://www.youtube.com/watch?v=6ZC5WC79Kkc&NR=1
எப்படி இருந்துச்சு? ஆனா இது உண்மையில்லையாம். ஏதோ ஒரு விளம்பரத்துக்காக எடுக்கப்பட்டதாம். ஆனால் ஒளிபரப்பப்படலை போலருக்கு. அதை யாரோ YOUTUBE ல போட்டுவிட்டுருக்காங்க. இப்பல்லாம் இணையத்திலிருந்து எந்தத் தகவல் கிடைச்சாலும், அது உண்மையா இல்லையான்னு வேற ஆராய வேண்டிருக்கு. உலகத்துல நம்பகத் தன்மை குறைஞ்சுட்டே வருதோ?
இப்போ ஒரு ஆரோக்கியம் சம்பந்தமான தகவல்:
மனித உடம்புல ரொம்ப முக்கியமான உறுப்பு சிறுநீரகம். இந்த சிறுநீரகம் ஊர்ப்பட்ட வேலை பார்க்குது – இரத்தத்தை சுத்தப்படுத்துது, கழிவை வெளியேற்றுது, சிவப்பணு உற்பத்தி அதிகரிக்க உதவுது.. அது இவ்ளோ வேலை பார்க்குதோ, அதுக்குக் கொஞ்சம் ஓய்வு கொடுக்கலாம்னு நினைச்சு தண்ணி குறைச்சுக் குடிச்சோம்னா, சிறுநீரகம் நிரந்தரமா ஓய்வு எடுத்துடுமாம். அதுக்கு வேலை குடுத்துட்டே இருக்கணுமாம். அதனால தண்ணி நிறைய குடிங்க. இந்த வெயில் காலத்தில் இது ரொம்ப முக்கியம் கூட..
தவறுகள் பலவிதம். சில பேரோட தவறுகள் நல்ல விளைவுகளைக் கூட ஏற்படுத்தும். விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் பல இப்படி ஏற்பட்டதுதானே. இப்படி ஒவ்வொருத்தர் செய்யற தவறுகளால விளையற நன்மைகள் என்னன்னு பார்க்கலாமா…
முடி திருத்தும் தொழிலாளி தவறு செஞ்சா, புது சிகை அலங்காரம்
ஓட்டுனர் தவறு செஞ்சா, புதுப் பாதை
பெற்றோர் தவறு செஞ்சா, புதுத் தலைமுறை
அரசியல்வாதி தவறு செஞ்சா,புது சட்டம்
தையல் தொழிலாளி தவறு செஞ்சா, புது வடிவமைப்பு
ஆசிரியர் தவறு செஞ்சா, புது தேற்றம்
நம்ம முதலாளி தவறு செஞ்சா, புது யுக்தி
அதே நாம (தொழிலாளி) செஞ்சா, அது தவறு தான்.
இது நியாயமா? நீங்களே சொல்லுங்க. (முக்கியமான ஒருத்தரை விட்டுட்ட, சாமியாரைப் பத்தி சொல்லலையேன்னு கேட்கறீங்களா, அந்த சோகக் கதையை கடைசியில் பாருங்க).
சின்னப் பிள்ளைகள் எதைக் கத்துக்குடுத்தாலும் உடனே பிடிச்சுக்கும். 5 வயசுக்குள்ள 14 மொழி கத்துக்கற ஆற்றல் குழந்தைகள்கிட்ட இருக்குன்னு கேள்விப்பட்டிருக்கேன். குட்டிப்பிள்ளைகளுக்கு கடவுள் துதிப்பாடல்கள்
கத்துக்குடுக்கணும்னு நினைச்சீங்கன்னா, இந்தக் குறுந்தகடு உங்களுக்கு உபயோகப்படலாம்:
http://www.nilashop.com/product_info.php?products_id=473
தெனாலி ராமனோட கதைகள் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும். இந்தக் கதைகள்லாம் படிச்சுதான் என்ன மாதிரி அறிவாளிகள்(சரி, விட்டுடுங்க.. பிழைச்சுப் போறேன்) உருவாகறாங்க. புத்தகம் படிக்கிறது ஒரு கலை. இந்தக் காலத்தில் பிள்ளைகள் கணிப்பொறியே கதின்னு இருக்காங்க. அவங்களுக்காக தெனாலி ராமன் படக்கதைகள் குறுந்தகடு வடிவில் :
http://www.nilashop.com/product_info.php?products_id=473
இணையத்தில் என்னைக் கவர்ந்த சில புகைப்படங்கள் இங்கே:
கிளம்ப வேண்டிய நேரம் வந்தாச்சு, அதுக்கு முன்னாடி சாமியார் சொல்ற சோகக் கதையையும் படிச்சுடுங்க:
வெயில் ரொம்ப அதிகமாயிடுச்சு. தண்ணி நிறைய குடிங்க, நீர்ச்சத்து உள்ள பழங்கள் சாப்பிடுங்க, குளிர்ந்த தண்ணில குளிங்க, வேகமா வளரக்கூடிய கொடிகள் வளருங்க( தண்ணி தெளிச்சு விட்டீங்கன்னா, வீட்டுக்குள்ள குளுமையா இருக்கும்), விடுமுறையில் குழந்தைகளை அந்த வகுப்பு, இந்த வகுப்புன்னு சொல்லித் துன்புறுத்தாம, சொந்தபந்தங்கள் வீடுகளுக்கோ, வெளியூருக்கோ அழைச்சுட்டுப் போங்க (அன்பும் பாசமும் வளரும்) என்று நட்போடு கூறி விடைபெறுவது
உங்கள் ஜோ
“