Product Description
A mixed treat for excellent experience in reading and joy of reading is sought to be provided with this book dealing with a variety of topics such as Self development, Spirituality, Variety of Tastes, Information, Happenings, Thoughts, History and so on. The author has the knack of dealing with words, bringing out an article without any loss of interest, translation without tampering with the original thoughts and concepts. An example can be quoted in Chathuragiri mountain where the Siddhars lived. This was published as a serial in NILACHARAL which won the acclaim of the readers and the reading ultimately gives us a feeling of our personally visiting the hills and related experiences. Suggesting ten easy methods for stress release, the author in some articles takes the aid of Zen philosophy. Flowering youth, experiences of the paddy fields flow like a breeze in an article. While there are enough of inputs, there are some light chit-chats too. There are justifiable reasons to feel that certain films blunt our minds. There are references to the great unusual actions of Tibetan Lamas and our Siddhars. It is indeed quite useful to all types of readers. (சுயமுன்னேற்றம், ஆன்மிகம், பல்சுவை, தகவல்கள், நிகழ்வுகள், சிந்தனைகள், வரலாறு என பலதரப்பட்ட கலவையாய் மிளிரும் இந்நூல் சிறந்த வாசிப்பனுபவத்தையும், மலர்ச்சியையும் ஊட்டுவதாய் அமைந்திருக்கிறது. சொற்களை லாவகமாய்க் கையாண்டு சுவை குறைவுபடாமல் கட்டுரை அமைக்கும் பாங்கும், மூலக் கட்டுரையின் பொருள் சிதைவுறாமல் மொழி மாற்றம் செய்யும் தேர்ச்சியும் இருக்கிறது ஆசிரியரிடம். குறிப்பிடத்தக்க கட்டுரையாக சித்தர்கள் வாழ்ந்த சதுரகிரிமலையைக் குறிப்பிடலாம். நிலாச்சாரலில் குறுந்தொடராக வந்து மாபெரும் வரவேற்பைப் பெற்ற இக்கட்டுரை சதுரகிரிக்கு நேரில் சென்று வந்த அனுபவத்தை வாசிப்பின் முடிவில் தருகிறது. மன இறுக்கத்தைத் தளர்த்த பத்து எளிய வழிகளை எடுத்துரைக்கும் ஆசிரியர், சில கட்டுரைகளில் ஜென் தத்துவத்தையும் துணைக்கு அழைத்திருக்கிறார். மலர்ச்சியான இளவயது வயல்காட்டு அனுபவங்கள் நினைவுத் தீண்டலாய் ஸ்பரிசித்துச் செல்கிறது ஒரு கட்டுரை. தகவல்கள் சொல்லும் சாக்கில் சில்லென அடிக்கும் அரட்டைகள் சிலவும் உண்டு. சில பல சினிமாக்கள் மூளையை மழுங்கடிப்பதாக ஆத்திரப்படுவதில் நியாயம் இருக்கத்தான் செய்கிறது. அசாத்திய செயல்களைச் செய்யும் திபெத்திய லாமாக்கள் பற்றியும், சித்தர்களைப் பற்றியும் சிலாகித்துப் பேசுகிறார். பலதரப்பினருக்கும் பயனுள்ளதாய் அமைந்திருக்கிறது இந்நூல்.)