Product Description
A famous writer disappeared under mysterious circumstances after publishing a great novel. People who tried to trace him and to find the truth were threatened, and told not to do so. A reporter was jailed in a fabricated case for his investigations, and finally silenced. After 25 years, the investigation was started again by another reporter, Arun, the hero of this story. In the course of his investigations, he found that the novel was based on real life incidents, and that the major characters were part of his own family. What was the truth ? Why did the writer disappear, why did some powerful people try to stop the investigation The answers are woven into the plot of this love story which is filled with secrets, suspense and sacrifice. (நீ நான் தாமிரபரணி – மனித உணர்வுகளின் பின்னணியில் ஒரு துப்பறியும் நாவல். ஒரு பத்திரிக்கையாளனைத் துப்பறிபவனாக அறிமுகப்படுத்தி கதையை வளர்த்திருக்கும் விதம் அருமை. நாவலுக்குள்ளே, இந்த நாவலின் தலைப்பையுடைய இன்னொரு நாவலைக் கதைத் தளமாக எடுத்திருப்பது புதுமை. ஆரம்பத்திலிருந்து எந்த ஒரு சிறு தகவலும், “தேவைதானா?” என்ற கேள்வியை வாசகர் மனதில் எழுப்பவிடாமல், ஒவ்வொன்றையும் பின்னால் கோர்த்திருக்கும் திறனைப் பாராட்டியே ஆக வேண்டும். தாமிரபரணி நதிக்கரை நிகழ்வுகள் நிஜம்போல் கற்பனையில் தோன்றச் செய்யும் வித்தை அறிந்திருக்கிறார் ஆசிரியர். கதைக்கும், கதாபாத்திரங்களுக்கும், அவர்களது உணர்வுகளுக்கும், மனித உறவுகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். இனிய எளிய தமிழ் நடை, ஆர்வத்தைத் தூண்டும் கதை அமைப்பு, புத்திசாலித்தனமான காட்சியமைப்புகள் இவையனைத்தும் நீ நான் தாமிரபரணியில் பயணிக்க வாசகர்களைத் தூண்டுகின்றன.)