Product Description
Periasamy is a biochemist with some experience in chemical preparations. On the request of his immediate supervisor Mariya he makes a compoud for her. He realizes that it is not a research chemical but designer drug MPPP by the reward she gives him. He is drawn into a relationship with her neglecting his young wife and a one-year-old son. The affair leads him in to deep trouble when Mariya starts planning to use his skills to prepare MPPP for sale in illegal drug market. He is frightened and with the help of his class-mate Ambika escapes not only from Mariya but also from his family. For the next thirteen years he helps Ambika climb corporate ladder while remaining as a humble professor in junior colleges. Ambika accepts the CEO position of a computer firm and leaves Periasamy on friendly terms. Subsequently, he also loses his job after accused of sex harasment and settles for a high school teaching position. In his biology class he admires two students, a brother and a sister, and when he finds out who they are… (உயிரியல் ஆய்வுக்கூடத்தில் பெரியசாமி பிஎச்.டி. முடித்த ஆராய்ச்சியாளன். ஓரளவு வேதியியல் அறிந்த அவன் மேற்பார்வையாளர் மரியா கேட்டதற்காக ஒரு இரசாயனப் பொருளைத் தயாரித்த தருகிறான். அது சாதாரண பொருளல்ல, எம்பிபிபி என்கிற போதை மருந்து என்று அதற்கு அவள் அளிக்கும் பரிசிலிருந்து தெரிகிறது. ஒரு வயது பையனும், இரண்டு வருஷ திருமணமும் தராத இன்பம் கள்ளத் தொடர்பில் அவனுக்குக் கிடைக்கிறது. சில மாதங்கள் கடந்ததும் மரியா அவன் மூலம் நிறைய எம்பிபிபி தயாரித்து கொள்ளை விலைக்கு விற்கப் போவது அறிந்து திகில் அடைகிறான். அவளிடமிருந்து தப்பிக்க தன்னுடன் கல்லூரியில் படித்த அம்பிகாவிடம் சரணடைகிறான். அம்பிகா வணிக உலகின் பதவி ஏணியில் ஏற பெரியசாமி உறுதுணையாக இருக்கிறான். தன்னுடைய தொழில் முன்னேற்றத்தில் அக்கறை கொள்ளாமல் ஆரம்பக் கல்லூரி ஆசிரிய பதவியில் திருப்தி அடைகிறான். பின்னர் அம்பிகா பெரியசாமியிடமிருந்து நட்புமுறையில் விலகிச் செல்கிறாள். ஒரு மாணவியின் குற்றச்சாட்டினால் வேலையை இழந்த பெரியசாமி உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியன் ஆகிறான். அவன் நடத்தும் உயிரியல் வகுப்பில் மோகனும், அதிபுத்திசாலியான அவன் தங்கை சவிதாவும். அவர்கள் யார் என்று அவன் அறியவரும்போது புதிய முடிச்சொன்று அவிழ்கிறது.)