Product Description
This novel is the result of the passion shown by the write, in search of folklores, who understands that the same story theme in various cultures expressed differently could be brought together in Tamil. Though the core in each story originates from various cultures’ folklores around the world, this novel intertwines our habits and culture in it. These children’s stories are so different from each other, and have been selected not only to preach moral values to the children but also to kindle their imagination and provoke their zealousness to read. Interesting characters in the stories like the clever moya rabbit, the princess who searches for the goose princes, a little bird that preaches mottos, a greedy rich man who asks the price of fragrant smell, and Velan who tries to lose his golden cows decorate the stories wonderfully. (நாடோடிக் கதைகளுக்கான தனது தேடலில், ஒரே கதைக் கரு வெவ்வேறு நாகரீகங்களில் வெவ்வேறு விதமாக வெளிப்பட்டிருப்பதை உணர்ந்த ஆசிரியர் தமிழிலும் அவற்றைக் கொண்டு வரவேண்டும் என்ற ஆர்வம் கொண்டதன் விளைவே இந்நூல். இந்நூலிலிருக்கும் ஒவ்வொரு கதையின் ஆதியும் உலகின் பல்வேறு நாகரீகங்களின் நாடோடிக் கதைகளில் இருந்தாலும் இவை நம் பண்பாடு, பழக்கவழக்கங்களினூடாய் இந்நூலில் பின்னப் பட்டிருக்கின்றன. சிறுவர் கதைகள் வெறும் நீதி போதனைக் கதைகளாய் இல்லாமல் அவர்களின் கற்பனை வளத்தையும் வாசிப்பின் மீதான ஆர்வத்தையும் தூண்டும் விதமாக இருக்கவேண்டுமென்ற எண்ணத்தில் ஒவ்வொரு கதையும் வெவ்வேறு விதமாய் இருக்கும் வண்ணம் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கின்றன. அதிபுத்திசாலியான மோயா முயல், வாத்து இளவரசர்களைத் தேடும் இளவரசி, பொன்மொழிகள் போதிக்கும் சின்னஞ்சிறு குருவி, வாசனைக்கு விலை கேட்கும் பேராசைப் பணக்காரன், தங்கப் பசுக்களைத் தொலைக்க முயலும் வேலன் போன்ற பல சுவாரசியமான பாத்திரங்கள் இந்தக் கதைகளை அலங்கரிக்கின்றன.)