தேவையான பொருட்கள் :
வெந்தயக்கீரை ஒரு கட்டு
துவரம்பருப்பு – 2 மேசைக்கரண்டி
சீரகம் – ஒரு தேக்கரண்டி
பெருங்காயம் – சிறிய துண்டு
சிகப்பு மிளகாய் – 8 முதல் 10 வரை
தேங்காய்த் துருவல் – 2 மேசைக்கரண்டி
புளி – சுவைக்கேற்ப
உப்பு – சுவைக்கு
எண்ணெய் – சிறிது
செய்முறை:
வெந்தயக்கீரையை நன்றாக தண்ணீரில் கழுவி, பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு சூடாக்கவும். அதில் பெருங்காயத்தைப் பொறித்து, துவரம்பருப்பை பொன்னிறமாக வறுத்து, மிளகாய், சீரகத்தையும் சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.
தேங்காய்த் துருவலை வதக்கிய பிறகு, வறுத்தவற்றையும் அதில் சேர்த்து, புளி, உப்பையும் தேவையான அளவு சேர்த்துக் கொள்ளவும். பிறகு வதக்கியதை மிக்சிக்கு மாற்றி விடவும்.
கடாயில் சிறிது எண்ணெய் விட்டு நறுக்கிய கீரையை நன்றாக சிறு தீயில் கிளறி விடவும். கசப்பு சுவை இல்லாமல் கீரையை நன்றாக வதக்க வேண்டும்.
பிறகு எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து துவையலாக அரைக்க, வித்தியாசமான சுவையில் வெந்தயக்கீரை துவையல் தயார்.”
தன்க் யொஉ