தேவையானவை:
துவரம் பருப்பு – 1 1/ 2 கோப்பை
பொடியாக நறுக்கிய வெந்தயக்கீரை – 2 கோப்பை,
வெங்காயம் – 1
தக்காளி -1
குடமிளகாய் – 1
பச்சை மிளகாய் – 3,
மிளகாய் தூள் – அரைத் தேக்கரண்டி
கரம்மசாலா தூள் – ஒரு தேக்கரண்டி ,
க டுகு – தேவையான அளவு
சீரகம் – தேவையான அளவு,
எண்ணெய் – 2 மேஜை கரண்டி,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
துவரம்பருப்பை ஒரு மணிநேரம் ஊற வைக்கவும். பருப்பை குக்கரில் இரண்டு விசில் வரும் வரை வேகவிடவும். (குழைய வேண்டாம்).
வெங்காயம், தக்காளி, குடமிளகாய் ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெயை ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரகம் போட்டு வெடித்ததும், வெங்காயம், தக்காளி, வெந்தயக்கீரை , குடமிளகாயைப் போட்டு வதக்கிக் கொள்ளவும்.
இரண்டு நிமிடம் கழித்து மிளகாய் தூள் , கரம் மசாலா தூள் போட்டுக் கிளறவும்.
பிறகு வெந்த பருப்பைச் சேர்த்து , தேவையான தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, மேலும் பத்து நிமிடம் வேகவிடவும்.
சுவையான வெந்தயக்கீரை குடமிளகாய் தால் தயார். சாதத்துடனோ, சப்பாத்தியுடனோ சாப்பிடவும்.
மறவாமல் உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.