வெஜிடபிள் முட்டை ஆம்லெட்

தேவையானவை:

முட்டை – 5,
முட்டைகோஸ் – தேவையான அளவு,
குடைமிளகாய் – 1,
காலிபிளவர் – பாதிப் பூ,
பெரிய வெங்காயம் – 1,
பச்சை மிளகாய் – 2,
பொட்டுக்கடலை மாவு – 3 தேக்கரண்டி,
மிளகுத் தூள் – அரை தேக்கரண்டி,
மஞ்சள்தூள் – கால் தேக்கரண்டி,
கறிவேப்பிலை – ஓர் ஆர்க்கு,
உப்பு – சுவைக்கேற்ப,
எண்ணெய் – தேவையான அளவு,

செய்முறை:

முதலில், காலிபிளவரைத் துண்டுகளாக்கி, உப்பு கலந்த தண்ணீரில் போட்டுச் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். தண்டுகள் இல்லாமல், வெண்மையான பூக்களை மட்டும் உதிர்த்துக் கொள்ளுங்கள்.

முட்டைகோஸ், குடைமிளகாய் ,வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். பிறகு, ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு மஞ்சள் தூள், மிளகுத் தூள், பொட்டுக்கடலை மாவு, உப்பு ஆகியவற்றைப் போட்டுச் சிறிது தண்ணீர் விட்டுக் கரைத்துக் கொள்ள வேண்டும். பின், அதில் முட்டைகளை உடைத்து ஊற்றி நன்கு அடித்துக்கொள்ளுங்கள்.

அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் ஊற்றி, நறுக்கி வைத்துள்ள காய்கறிகளைப் போட்டு நன்கு வதக்க வேண்டும். ஆறியதும் முட்டைக் கலவையைக் கொட்டிக் கலந்து,தோசைக்கல்லில் சிறு சிறு அட்டுகளாக (Omelette) ஊற்றிச், சுற்றிலும் எண்ணெய் ஊற்றி வேகவிடுங்கள். சிறிது வெந்ததும் திருப்பிப் போட்டு, இரண்டு பக்கம் சிவந்ததும் எடுத்துச் சுடச் சுடப் பரிமாறுங்கள். பின்னர், உங்கள் அனுபவத்தையும் சுடச் சுட எங்களுக்குப் பரிமாறுங்கள்!

About The Author