தேவையான பொருட்கள்:
அரிசி மாவு – 4 கோப்பை,
வறுத்த கடலை மாவு – 1 கோப்பை,
நெய் – ஒரு தேக்கரண்டி,
மிளகாய்த்தூள் – 1 ½ தேக்கரண்டி,
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – ஒரு மேசைக்கரண்டி,
பொடியாக நறுக்கிய வெங்காயத் துண்டுகள் – ஒரு கோப்பை,
சோடா மாவு – ஒரு சிட்டிகை,
கொத்துமல்லி, கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய புதினா, உப்பு – தேவையான அளவு,
எண்ணெய் – பொறிக்கத் தேவையான அளவு.
செய்முறை:
எண்ணெயைத் தவிர மற்ற எல்லாப் பொருட்களையும் ஒன்றாகக் கலந்து கொண்டு, சிறிது சிறிதாக நீர் சேர்த்துக் கெட்டியாகப் பிசைந்து கொள்ளுங்கள். பிறகு, வாணலியில் எண்ணெயைக் காய வைத்து, பிசைந்த மாவை உருண்டைகளாக உருட்டிப் போட்டுப் பொன்னிறத்தில் பொரித்தெடுங்கள். உதிர்த்துப் போட்டும் பொரிக்கலாம்.
இந்தத் திடீர் மழையின் மாலை நேரத்தை இந்தப் பக்கோடாவுடன் ரசியுங்கள்! உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர மறவாதீர்கள்!