புகை, புகை – அடுக்களை முழுக்க ஒரே புகை! சாப்பாட்டு அறை நிறைய பலப்பல பலகார வகை. அம்மாவுக்கு ஏகப்பட்ட திருப்தி – பின்னே, சும்மாவா லட்டு, ஜிலேபி, புது மாதிரி தேன்குழல், அது இது எனப் பலவகை அயிட்டங்கள் செய்து முடித்துவிட்டாளே! அவளுக்கு உதவியாகச் செசில் ஓடி ஆடி வேலை செய்துகொண்டிருந்ததில் செசிலுக்கும் திருப்தி. அப்பா குட்டி போட்ட பூனையாக வரவேற்பறைக்கும் அடுக்களைக்குமாக நடுநடுவே– சாப்பாட்டு
அறைக்குமாகச் சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருந்தார். அப்பா உடம்பு பெரிய சர்க்கரை ஆலை. சர்க்கரை என்று எழுதிக் காட்டினாலே அவருடைய glycemie 3 mgm-ஐத்தாண்டி எகிறும். அதனால் அப்பாவுக்கு எந்த இனிப்பையும் கண்ணில் கூடக் காட்டமாட்டாள் அம்மா.
This story appeared in nilAccAral before.