மூலம்: இணையம்
விரல்களையும், விரல் நகங்களையும் அழகுறப் பேணிப் பாதுகாக்கும் வழிமுறைகளைக் காண்போமா..
உணவுமுறை :
நல்ல சத்தான உணவு – விட்டமின் ஏ, விட்டமின் சி , கால்ஸியம், ஃபோலிக் ஆஸிட், புரோட்டீன், விட்டமின் பி12 நிறைந்த உணவுகளை அவசியம் சாப்பிட வேண்டும்.
பழங்கள், பச்சைக் காய்கறிகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
கேரட் ஜூஸ் குடிப்பது நல்லது.
அதிக அளவு தண்ணீர் குடிப்பது நகங்களைப் பாதுகாக்கும்.
நகங்களுக்கு அழகூட்ட :
நகங்களைக் கிள்ள, கீற, குழி பறிக்க கருவி போல் உபயோகிக்காதீர்கள்.
அழகு சாதனங்களை, குறிப்பாக வாசனைத் திரவியங்களை குறைந்த அளவில் உபயோகிக்கவும்.
அதிக நேரம் தண்ணீரில் கை வைத்திருக்கத் நேர்ந்தாலோ அல்லது பாத்திரம் கழுவுதல், துணி துவைத்தல் போன்ற வேலைகளில் ஈடுபடும்போதோ கையுறைகளை உபயோகிப்பது நல்லது.
நகங்களை வெட்டும் போது உங்கள் கைவிரலுக்கேற்றவாறு வளைவாக வெட்டவும்.
நகங்களைக் கழுவி எப்போதும் உலர்வாக வைத்திருக்கவும்.
இளஞ்சூடான நீரில் நகங்களை சிறிது நேரம் ஊற வைக்கவும்.
தரமான லோஷன்களைத் தடவி மஸாஜ் செய்யவும்.
நகப் பூச்சு போடும்முன் நகத்தில் ஏற்கெனவே இருக்கும் பூச்சுக்களை சுத்தப்படுத்த வேண்டும். இதற்கு நெயில் பாலிஷ் ரிமூவர் உபயோகிக்கவும்.
நிதானமாக, முறைப்படி உலர வைத்து நகப் பூச்சு போடுவதால் நகங்கள் நன்கு பாதுகாக்கப்படும்.
நகங்கள் அடிக்கடி உடைந்தால் உணவில் கவனம் தேவை என அர்த்தம். கால்ஸியம் குறைந்தாலோ, அதிக நேரம் தண்ணீரில் இருந்தாலோ நகங்கள் அடிக்கடி உடைய வாய்ப்புண்டு.
முகப்பருவை நிக்க யன்ன் சைய்ய வென்னும்