வாழ்க்கை வாழ்வதற்கே!

(மூலம் : enlightenedbeings.com)

வாழ்க்கையில் மகிழ்ச்சி தேவை என்றால் முதலில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளையும் உங்கள் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டுமென எண்ணுவதை நிறுத்துங்கள். நீங்கள் வருந்துவதாலோ, அதையே நினைத்துக் கொண்டு இருப்பதாலோ எதுவும் மாறப் போவதில்லை. வாழ்வை அதன் போக்கில் விட்டு, உங்கள் முயற்சியைத் தொடருங்கள். நடப்பவை அனைத்தும் நன்மைக்கே என எடுத்துக் கொள்ளுங்கள்.

எரிமலை சாம்பலில் அதிக சத்துக்கள் இருப்பதைப் போல் எந்த ஒரு துன்பத்திலும் நிச்சயம் ஒரு நன்மை இருக்கும். அன்னப்பறவை போல் துன்பத்தை விலக்கி நன்மையை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். எல்லா வெற்றிகளுக்கும் பின்னால் நிச்சயம் ஒரு வலி மிகுந்த கடினப் பாதை இருக்கும்.

மற்றவர்களிடம் குறை காணுவதை விட்டு உங்களுக்குள் என்ன நடக்கிறது என கவனியுங்கள். உங்கள் ஆழ்மனதின் விருப்பங்கள், நம்பிக்கைகளை அறிந்து, அதன் சின்னச் சின்ன ஆசைகளை நிறைவேற்றி, உங்களின் லட்சியத்திற்குத் தயார் படுத்துங்கள்.

அனைத்து வசதிகளும் இருந்தால்தான் சாதிக்க முடியும் என்பது தவறு. வசதி இருப்பின், வரும் வாய்ப்புகளை மட்டுமே பயன்படுத்த முயலுவோம். இல்லாவிட்டால், இனி என்ன செய்யலாம் என யோசித்தே மற்றவருக்கும் வாய்ப்புகளை வழங்குவோம்.

எப்போதும் ஏதோ ஒன்றை நினைத்து வருந்திக் கொண்டு நிம்மதியின்றி இருப்பவன் பைத்தியமென ஹெரொடொடுச் என்ற அறிஞர் கூறுகிறார்.

மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுப் பார்ப்பதை விட்டுவிட்டு, கடவுள் ஒரு வழியை மூடினால் ஒரு வழியைக் காட்டுவார் என எண்ணுங்கள். அதில் உங்களால் எவ்வளவு தூரம் சாதிக்க முடியும் எனப் பாருங்கள்.

ஒரு நிகழ்வு நிகழ்வில்லையெனில் அதில் உங்கள் குணத்திற்கு ஒவ்வாத ஏதோ ஒன்று உள்ளது என அர்த்தம். இன்று முதல் ஆனந்தம் என வீட்டில் உங்களுக்கு பிடித்த இடத்திலிருந்து உங்களுக்கு பிடித்த செயலைச் செய்யுங்கள்.

வீட்டில் எந்த இடமும் பிடிக்கா விட்டால் வெளியே வாருங்கள். இயற்கை மலர்கள், மனிதர்கள், மரங்கள், மலைகள், நதிகள் எனப் பரந்து விரிந்திருக்கிறது. அதில் உங்களுக்குப் பிடித்த தனிமை நிச்சயம் கிடைக்கும். அந்தத் தனிமையில் உங்களைத் தேடி எதிர்மறை எண்ணங்களை விலக்குங்கள்.

மனதில் எதிர்மறை எண்ணங்களை விலக்கினால் அந்தக் காலி இடம் நேர்மறை எண்ணங்களால் நிறையும். இயற்கையை நம்பி வாழ்வின் ஒவ்வொரு வினாடியையும் ரசித்து உங்கள் லட்சியத்திற்குத் தேவையான உங்களிடம் இல்லாத திறமையைக் கற்றுக் கொண்டு, கடுமையான உழைப்புடன் நல்ல எண்ணங்களால் நல்முயற்சி செய்தால் வாழ்க்கையில் வெற்றி உங்களுக்கே!

About The Author

3 Comments

  1. agnrajan

    Superb. Excellent. keep it up. May the Lord Almighty shower His choicest blessings for your welfare with good health, long life and cheer always for yourself with all your family members and friends.

  2. MANOHARAN

    தன்க் யொஉ fஒர் தெ கோட் அட்விcஎ இட் நில்ல் கெல்ப் டொ ம்ய் லிfஎ

    இஅம் எ௯பெcடிங் மொரெ திச் ட்ய்பெ ஒf அட்விcஎ டொ அசிவெ தெ டர்கெட்.

    ப்ய்
    மனொகரன்

Comments are closed.