தேவையானவை:
வாழைக்காய் – 2,
மஞ்சள்தூள் – கால் தேக்கரண்டி,
உப்பு – தேவையான அளவு,
எண்ணெய் – தேவையான அளவு,
மசாலாவுக்கு:
தேங்காய்த் துருவல் – 2 மேசைக்கரண்டி,
வரமிளகாய் – 2,
சீரகம் – அரை தேக்கரண்டி,
மிளகு – கால் தேக்கரண்டி,
சோம்பு – கால் தேக்கரண்டி,
சிறிய வெங்காயம் – 6,
பூண்டு – 4 பற்கள்,
தாளிக்க:
கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை – தேவையான அளவு.
செய்முறை:
வாழைக்காயை வட்ட வடிவ வில்லைகளாக நறுக்கி, நீரில் போட்டு, உப்பு சேர்த்து வேகவிட்டு இறக்கிக் கொள்ளுங்கள். அதிகமாக இருக்கும் நீரை வடித்து விடுங்கள். மசாலாவுக்குரிய பொருட்களைக் கரகரப்பாக அரைத்துக் கொள்ளுங்கள்.
வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு போடுங்கள். கடுகு வெடித்ததும் உளுத்தம்பருப்பு போட்டு, சிவந்ததும் கறிவேப்பிலை போட்டு வதக்கிக் கொள்ளுங்கள்.
பிறகு, அதில் வெந்த வாழைக்காய், மஞ்சள்தூள் சேர்த்து வதக்க வேண்டும். அத்துடன் அரைத்த மசாலாவைச் சேர்த்து, சுருள வதங்கியதும் இறக்க வேண்டும். (தேவையானால் சிறிது உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள்). சுவையான வாழைக்காய் பொடிமாஸ் ரெடி! சாம்பார் சாதத்துடன் இதைச் சுவைத்துப் பாருங்கள்! உங்கள் அனுபவத்தை மறவாமல் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.