நானுமற்று நீயுமற்று
நடுவிற் நமக்குள் கோடுகள் இட்டு
நல்லுறவுமற்று பார்த்தபோது
இரும்பு சீலையிட்டு
புன்னகையிட்டு
நெஞ்சுக்குள் கனலையிட்டு
கரங்கள் குவித்து
நம்புவோர்க்கு நம்பிக்கையிட்டு
அறிவுசெறிவுடன் பெரும் வளர்ச்சியை
நோக்கி பின் சென்றே சிகரம் அடைந்தோம்
மண் வென்றோம்; மகத்துவம் கண்டோம்
பாலையிற் பெய்த பெருமழையாய்
கருணை கிளைகள் எட்டினோம்
எளியவர் யாரும் எளியவராய் நின்றிடவே
வல்லமையுடன் திகழ்கிறோம் நாம்
வறுமை அறுக்க
உலகைக் காக்க
நம் பெருமை பெருக்க