என்ன நண்பர்களே, எப்படி இருந்தது போன வார ‘வார்த்தை வேட்டை’? அனி 12 வார்த்தைகளைக் கண்டுபிடிச்சிருந்தாங்க. ராமாராவும் நிறைய வார்த்தைகளை வேட்டையாடியிருந்தாரு. அவங்க இருவருக்குமே எங்களுடைய வாழ்த்துக்கள்! ‘வர்த்தகம்’ அப்படீங்கிற தலைப்புக்காக ஜகா வாங்குறதாக் காரணம் சொல்லியிருக்காரு மகி அருண். ஆனாலும் இது ரொம்ப டூ மச்சுங்கோ!… பொதுவா, ‘வார்த்தை வேட்டை’யில் கொடுக்கப்படும் தலைப்புகளும் வார்த்தைகளும் நாம் அனுதினமும் உபயோகப்படுத்தும் விஷயங்கள்தான். அதனால தைரியமா வார்த்தைகளை வேட்டையாடலாம். போன வார வேட்டைக்கான சரியான வார்த்தைகளைக் கீழேயுள்ள படத்தில் காட்டியிருக்கோம். பார்த்துத் தெரிஞ்சுக்கோங்க!
இந்த வார வேட்டைக்கான தலைப்பு ‘உடலியல்’. உடலியல் மற்றும் அதன் செயல்பாடுகள் சம்பந்தமான பல வார்த்தைகள் இங்கே உங்களுடைய வேட்டைக்காகக் காத்திட்டு இருக்கு. என்ன வேட்டையை ஆரம்பிச்சாச்சா?
“
1. குரல்நாண்
2. நிணநீர்
3. குதம்
4. நரம்பிழை
5. பாதநீரி
6. குடற்பால்
7. வரித்தசை
8. அழற்சி
9. அணுப்பிராணி
10.பற்சிகரம்
11. பற்கூழ்
12. கணு
13. கவர்தல்
14. கரம்
15. குடி
அனி, பாத நீரி, கணு, கவர்தல், கரம், குடி இன்த வார்த்தைகள் தவிர மற்ற வார்த்தைகள் சரியானவை. விடுபட்ட வார்த்தைகள் சொற்ப வார்த்தைகள்தான். அதையும் வேட்டையாடிடலாமே….
நரம்பிழை, குதம், குரல்நாண், குடற்பால், வரித்தசை, முடி, பற்கூழ்,பற்சிகரம்,அணுப்பிராணி, நிணநீர், காதமணி,அழற்ச்சி,
ஜெயன்தி, நேன்க கொடுத்துள்ள வார்த்தைகளில் முடி, காதமணி வார்த்தைகள் தவிர மேதி வார்த்தைகளை சரியாக கண்டுபிடிச்சிருக்கீங்க. இன்னும் சில வார்த்தைகள்தான் பாக்கியிருக்கு. அதையும் உங்களால் கண்டுபிடிச்சிட முடியும்.