போன வார ‘வார்த்தை வேட்டை’யில் மகி, அனி, பாரதி சேர்ந்து தாங்கள் வேட்டையாடிய வார்த்தைகளைப் பின்னூட்டத்தில் அனுப்பியிருந்தாங்க. மகி நிறைய வார்த்தைகளை வெற்றிகரமாக வேட்டையாடியிருந்தார். பாரதி கிடைச்ச வார்த்தைகளையெல்லாம் வளைச்சு வளைச்சு வேட்டையாடியிருந்தாங்க. பாரதி உங்க முயற்சியைப் பாராட்டுறோம்! அடுத்தமுறை தலைப்பு சார்ந்த வார்த்தைகளை மட்டும் வேட்டையாடுங்க. போன வார வேட்டைக்கான சரியான வார்த்தைகளைக் கீழேயுள்ள படத்தில் காட்டியிருக்கோம். பார்த்துத் தெரிஞ்சுக்கோங்க!
இந்த வார வார்த்தை வேட்டைக்கான தலைப்பு ‘வர்த்தகம்’. வர்த்தகம் சார்ந்த பல வார்த்தைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் நீங்க வேட்டையாடக் காத்திட்டு இருக்கு. இந்த வாரம் யார் அதிக வார்த்தைகளை வேட்டையாடுறாங்கன்னு பார்ப்போமா?
“
1- நாணயமாற்று
2-தவணைமுடிவு
3-ஐந்தொகை
4-செயற்குறிப்பு
5-தீர்வை
6-ஒதுக்கல்
7-தேய்மானம்
8-எதிரேடு
9-ஜப்தி
10-பேரெடு
11-துணைஜாமீன்
12-
13-
14-
15-
1. பேரேடு
2. திவாலா
3. செயற்குறிப்பு
4. துணைஜாமீன்
5. ஜப்தி
6. தேய்மானம்
7. தீர்வை
8. ஐந்தொகை
9. நாணயமாற்று
10. ஒதுக்கல்
11. எதிரேடு
12. தவணைமுடிவு
13.
யஷ்…வர்த்தகம் பற்றிய வார்த்தைகள்ல எனக்கு அவ்வளவாப் பரிச்சயமில்லை! அதனால இந்த வாரம் மீ எஸ்கேப்! மத்தவங்க எல்லாரும் ஆல்ரெடி கண்டுபுடிச்சிட்டாங்களே..அதைப் பாத்துக்கறேன்! 🙂
அனி மற்றும் ராமாராவிற்கு என்னுடைய வாழ்த்துக்கள். இப்போதைக்கு ராமாராவ் ஒரு வார்த்தை அதிகமாக வேட்டையாடியிருக்கார். ஆனால் இன்னமும் நிறைய வார்த்தைகள் பாக்கி இருக்கு. முயற்சி செய்தால் முடியாதது எதுவுமே கிடையாதாமே…
மகி, இது இப்படி சொன்னால் தப்பிச்சுக்கலாம்னு நினைக்கிறீங்களா? அதுதான் நடக்காது. எளிமையான வார்த்தைகள்தான் கொடுத்திருக்கேன். முயற்சி செய்யாமல் இப்படி பின்வாங்கலாமா?
12. வசக்கட்டு
13. முற்தூணை
14. மீகை
12. வசக்கட்டு
13. முற்தூணை
14. மீகை