என்ன நண்பர்களே, ‘இயற்பியல்’ தொடர்பான வார்த்தைகளை வேட்டையாட முடிஞ்சுதா? இயற்பியல் சம்பந்தமான பல வார்த்தைகளை நம்முடைய தினசரி உரையாடல்களில் அதிகமாகவும் சாதாரணமாகவும் ஆங்கிலத்தில் பயன்படுத்துகிறோம். ஆனால், அவற்றுக்கான தமிழ் வார்த்தைகளைப் போன வாரம் தெரிந்துகொண்டது நன்றாக இருந்தது இல்லையா? சரி. போன வாரத்துக்கான விடைகள் கீழேயுள்ள படத்தில் குறியிட்டுக் காட்டப்பட்டுள்ளன. நீங்கள் கண்டுபிடிக்க முடியாமல் போன வார்த்தைகளைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
இந்த வார வார்த்தை வேட்டை விளையாட்டுக்கான தலைப்பு ‘அலுவல்கள்’. உலகில் உள்ள ஒவ்வொரு மனிதரும் பல்வேறு அலுவல்கள் புரிகின்றனர். அவை தொடர்பான சிலபல வார்த்தைகள் இங்கு உங்கள் வேட்டைக்காகத் தயாராக உள்ளன. வேட்டையைத் தொடங்கலாமா?
“
வேட்டைக்களம் மாறிவிட்டதோ?
வேட்டைக்களம் மாறிவிட்டதோ?
இந்த வார கட்டம் வார்த்தை விளையாட்டு -04க்கு உரிய கட்டம்.
நன்றி அனி. வார்த்தை வேட்டைக்கான கட்டத்தை மாற்றிட்டியாச்சுப்பா…
1. குயவர்
2. தோட்டி
3. வேளாளன்
4. ராஜ்ய தூதர்/ தூதர்
5. பொக்கிஷதாரர்
6. தச்சன்
7. ஆய்வர்
8. கிராந்தகர் (?!!)
9. செம்படவர்
10. நாவிதர்
11. ஏவற்காரன்
12. வண்ணான்
—————-
இதுவரை இவ்வளவு வார்த்தைகள்தான் கிடைச்சது. இன்னும் இருக்கா? இவையெல்லாம் சரியா? 🙂
—————
மகி, கண்டுபிடித்த 12 வார்த்தைகள் சரிதான். ஆனால் இன்னமும் 3 வார்த்தைகளோட வஎட்டை பாக்கியிருக்குப்பா…
யஷ், நீங்க சொன்ன மற்ற 3 வார்த்தைகளில் தட்டான்” ஒன்று மட்டுமே என்னால கண்டுபுடிக்க முடிந்தது. மீதி 2 வார்த்தைகள் தெரிலை, நீங்க விடையைக் கொடுத்தபிறகும்! 😉 எழுத்துக்கள் இடம் மாறி இருக்கோ இல்ல, எனக்கு புரியலையோ தெரியலை! எனிவேஸ்..இட்ஸ் ஓகே! :)”
இட்ஸ் ஓகே மகி… 🙂