என்ன நண்பர்களே, கடந்த வாரம் தலைப்பு எளிமையாக இருந்ததா? அனி எப்பவும் போல அவங்க வேட்டையாடியிருந்த வார்த்தைகளை நமக்கு அனுப்பியிருந்தாங்க. என்னுடைய ஆச்சரியத்தைப் பார்த்துட்டு மகியும் தான் வேட்டையாடிய வார்த்தைகளை நமக்கு அனுப்பியிருந்தாங்க. இந்த விளையாட்டில் பங்கெடுத்துக்கிட்டதுக்கு உங்க இரண்டு பேருக்குமே என்னுடைய நன்றி மற்றும் வாழ்த்துக்கள்! ‘கடந்த வாரங்களில் வந்த புதிர்களை எல்லாம் நானும் கண்டுபிடித்துக்கொண்டேதான் இருந்தேன், இங்கே வந்து சொல்ல நேரம் கிடைக்கவில்லை!’ அப்படீன்னு மகி சொல்லியிருந்தாங்க. ஆனா, மகி உங்க திறமைக்கு முன்னாடி இந்த விளையாட்டு எம்மாத்திரம்! சும்மா கடகடன்னு வார்த்தைகளை வேட்டையாடிட மாட்டீங்க? போன வாரத்திற்கான ‘கணிதம்’ சம்பந்தமான வார்த்தைகள் என்னென்னன்னு கீழேயுள்ள படத்தில் குறியிட்டுக் காட்டப்பட்டிருக்கு.
இந்த வாரம், வார்த்தை வேட்டைக்கான தலைப்பு ‘இயற்பியல்’. அது சம்பந்தமான 16 வார்த்தைகள் கீழேயுள்ள படத்தில் நீங்க வேட்டையாடக் காத்திட்டிருக்கு. (மகி! போன வார விளையாட்டில் வார்த்தைகளின் எண்ணிக்கை கொடுக்கப்படலைன்னு சொல்லியிருந்தீங்க இல்லையா? இதோ, இந்த வாரத் தலைப்போட எண்ணிக்கையையும் கொடுத்திருக்கேன்). இனி எதற்காகப் பொறுத்திருக்கணும்? வேட்டையை ஆரம்பிக்கலாமே!
“
அரிதில்கடத்தி, இடைத்திரை, கிரகணம், உணர்கருவி, மின்னேற்றம், ஏச்கீஉபகரணம், மீள்சக்தி, பெருக்கிடசதி, சங்கேதம், மின்கலம், மின்சுற்று, விதி,
அருமை அனி. இன்னமும் நாலே நாலு வார்த்தைகள்தான் விளையாட்டை நிறைவு செய்ய தேவைப்படுது. எவ்வளவோ வார்த்தைகள் கண்டுபிடிச்சிட்டீங்க மீதம் கொஞ்ச வார்த்தைகள்தான்.
யஷ், இன்னிக்குதான் இங்க வரவே டைம் கிடைச்சதுங்க! தாமதமா வந்திருக்கேன். சாரி!
அறிவியல் புதிருக்கு ஆல்ரெடி விடை சொல்லிருக்காங்க, அதை பார்க்காம(!) நானும் கண்டுபிடிக்க டிரை பண்ணறேன்! 😉 🙂
மகி, நீங்க விடைகளைப் பார்க்காமல் முயற்சி செய்ய போறீங்க. நானும் அதை நம்பிட்டேன். 🙂