என்ன நண்பர்களே, கடந்த வாரத் தலைப்பு கொஞ்சம் வித்தியாசமாக இருந்ததே, யாரெல்லாம் முயற்சி செய்து பார்த்தீங்க? ஏமாற்றம் அடையாமல் அனி என்னைக் காப்பாத்திட்டாங்க. அனிக்கு ஒரு சிறப்புக் கைதட்டல் தந்தே ஆகணும்! தலைப்பைத் தேர்வு செய்தபோது இது கொஞ்சம் கடினமான தலைப்பாக இருக்குமோ அப்படீன்னு யோசிச்சோம். தலைப்பை மாற்றலாமா என்றுகூட யோசனை இருந்தது. ஆனால், எளிமையாக இருக்கும் புதிர்களில் பெரிதாக சுவாரசியம் இருக்காதே. அதனால், பேச்சுவழக்கில் அதிகம் பயன்படுத்தாத வார்த்தைகளை வேட்டையாடுவது நன்றாக இருக்கும் என்று முடிவு செய்து அந்தத் தலைப்பை வார்த்தை வேட்டைக்காகக் கொடுத்திருந்தோம். ஆனால், வேறு யாரும் முயற்சி செய்யாமல் இருப்பதைப் பார்த்தால் கொஞ்சம் ஆச்சரியமாக இருக்கு!
போன வாரப் புதிருக்கான விடைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் குறியிட்டுக் காட்டப்பட்டுள்ளன.
சரி, இந்த வாரம் என்ன தலைப்பு?… இது பற்றி யோசிக்கும்போது, நம் எல்லோருக்கும் தெரிந்த, நாம் தினம் தினம் ஏதாவது ஒரு சிறு விஷயத்திற்காவது உபயோகிக்கும் விதமானதாக இருந்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றியது. அந்த யோசனையில் கிடைத்த தலைப்புதான் ‘கணிதம்’. உடனே அடித்தல், கூட்டல், கழித்தல் அப்படீன்னு நினைக்க ஆரம்பிச்சுடாதீங்க. அதுக்காக ரொம்பவும் கடினமான வார்த்தைகளும் கிடையாது. நாம் அடிக்கடிப் பயன்படுத்தும் வார்த்தைகள்தான். ஆனால், இந்த வார்த்தைகளை நாம் ஆங்கிலத்தில் அதிகம் பயன்படுத்துகிறோம். அவற்றிற்கு நிகரான தமிழ் வார்த்தைகள் நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? சரி, பேசினது போதும் வேட்டையை ஆரம்பிக்கலாமே!…
“
இடசுழி, திசைகோள், பரிதி, மாறிலி, கோடு, தசமம், காரணி, சிற்றிலக்கம், கூம்பு, எடுகோள்,மீதி, சமம், முடிவிலி,
1.திசைகோள்
2.இடஞ்சுழி
3.முடிவிலி
4.பரிதி
5.குத்துயரம்
6.மீதி
7.காரணி
8.மாறிலி
9.கோடு
10.எடுகோள்
11.சிற்றிலக்கம்
12.தசமம்
இப்போதைக்கு இவ்வளவு வார்த்தைகள்தாங்க தெரியுது. இந்தப் புதிரில் மொத்தம் எத்தனை வார்த்தைகள் ஒளிந்திருக்கிறது என சொல்லலையே? 🙂
//வேறு யாரும் முயற்சி செய்யாமல் இருப்பதைப் பார்த்தால் கொஞ்சம் ஆச்சரியமாக இருக்கு! // கடந்த வாரங்களில் வந்த புதிர்களை எல்லாம் நானும் கண்டுபிடித்துக்கொண்டேதான் இருந்தேன், இங்கே வந்து சொல்ல நேரம் கிடைக்கவில்லை! 🙂
அனி, நீங்கள் வஎட்டையாடியிருப்பதில் கோடு, மீதி, சமம் வார்த்தைகள் தவிர மீதி வார்த்தைகள் சரியான வார்த்தைகள். வாழ்த்துக்கள்.
தசம்