என்ன நண்பர்களே, எப்படி இருந்தது போன வார வார்த்தை வேட்டை விளையாட்டு? போன வாரம் நாங்க கொடுத்திருந்த தலைப்பு விலங்குகள் மற்றும் பறவைகள் எழுப்பும் ஒலிப் பெயர்கள். நாங்க கொடுத்திருந்த வார்த்தைகளைக் கண்டுபிடிக்கக் கொஞ்சம் சிரமப்படுவீங்களோன்னு நினைச்சோம். ஆனால், அதிலும் 10 வார்த்தைகளை வேட்டையாடிய அணியைக் கண்டிப்பாகப் பாராட்டியே ஆகணும். ஆனால், இன்னும் சில வார்த்தைகள் உங்களுடைய வேட்டைக்காகக் காத்திருந்தன. கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் அவை குறியிட்டுக் காட்டப்பட்டுள்ளன.
ஒளிந்திருந்த வார்த்தைகளைப் படத்தின் வாயிலாகத் தெரிந்து கொண்டோம். இந்த ஒலிகளை எழுப்பும் விலங்குகள் மற்றும் பறவைகள் எவை?… தெரிந்து கொள்ளலாமா?
பிளிறல் – யானை.
பேசுதல் – கிளி.
எக்காளம் – எருது.
உறுமல் – கரடி, பன்றி, புலி, ஒட்டகம்.
அலப்பல் – குரங்கு.
ரீங்காரம் – தேனீக்கள்.
கதறல் – பசு.
அலறல் – ஆந்தை.
கர்ஜனை – சிங்கம்.
ஊளையிடல் – குள்ளநரி, ஓநாய்.
கொக்கரிப்பு – வாத்து.
முக்காரம் – எருது.
கிளைக்கூட்டு – ஆந்தை.
கீச்சிடல் – எலி.
சரி, இந்த வார வார்த்தை வேட்டையின் தலைப்பைப் பார்ப்போமா? தமிழ் மொழியின் அணிகள் சார்ந்த எழுத்துக்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் உங்கள் வேட்டைக்காகக் காத்திருக்கின்றன. ஒரு சின்ன விவரம் உங்களுக்குச் சொல்லட்டுமா? இங்கே 15 வார்த்தைகள் ஒளிந்துகொண்டிருக்கின்றன. என்ன உங்க வேட்டையை ஆரம்பிச்சிட்டீங்களா?
“
இடக்கரடக்கல், ஆகுபெயர், உருவகம், ஓட்டுவமை, சிலேடை, ஆற்றுடை, முற்றுருவம், உருவகலங்காரம், முரண், சித்தொழுங்கு, முரண்தொடை, பேச்சு, மேற்கோள், ஏற்றவணி, மோனை.
இடக்கரடக்கல், ஆகுபெயர், உருவகம், ஓட்டுவமை, சிலேடை, ஆற்றுடை, முற்றுருவம், உருவகலங்காரம், முரண், சித்தொழிங்கு, முரண்தொடை, பேச்சு, மேற்கோள், ஏற்றவணி, மோனை
வாவ் கலக்கறீங்க அனி. நீங்க கண்டுபிடித்ததில் இவைகளெல்லாம் சரியான வார்த்தைகள்.
இடக்கரடக்கல், ஆகுபெயர், உருவகம், ஓட்டுவமை, சிலேடை (வாரித்தை முழுமையாக இல்லையே), ஆற்றுடை, முற்றுருவம், உருவகலங்காரம், முரண்தொடை, மேற்கோள் (பன்மை வரணுமே), ஏற்றவணி, மோனை.
ஆனால் மீதம் இன்னும் சில வார்த்தைகள் இருக்குப்பா. இருந்தாலும் உங்களுடைய விடாமுயற்சி ரொம்பவும் பாராட்டுக்குறியது.