என்ன நண்பர்களே! வள்ளல்களின் பெயர்களை வேட்டையாடினீங்களா? எவ்வளவு வார்த்தைகளை நீங்க சரியாக வேட்டையாடியிருக்கீங்கன்னு தெரிஞ்சுக்கணுமா? கீழேயுள்ள படம் உங்களுக்காகக் காத்திருக்கு.
இப்போ நாட்ல இருக்கிற பெரிய பிரச்சினை மழையின்மை. மழை வர ரொம்பவும் அவசியமாக் கருதப்படுறது மரம். ஆனா, எல்லாரும் அவங்களுடைய சொந்தத் தேவைகளுக்காக மரங்களை வெட்டுறாங்க. இந்தப் பிரச்சினையைப் பத்தி பேச ஆரம்பிச்சா அதுக்கு முடிவே இல்லாம போயிடும். விஷயத்துக்கு வர்றேன். மழை வரம் தருகிற மரங்களின் பெயர்கள்தான் இந்த வார ‘வார்த்தை வேட்டை’க்கான தலைப்பு. என்ன, தலைப்பு எளிமையா இருக்குதானே? அப்புறம் எதுக்கு தாமதம்? வேட்டையை ஆரம்பிக்கலாமே!
“
கருவேலம் கொய்யா அத்தி சவுக்கு மலைவேம்பு இலந்தை புன்னை பூவரசு பலா ஆவேலம் அசோகு வாதுமை
1. கருவேலம் 2. பூவரசு 3. அசோகு 4. அத்தி 5. சவுக்கு 6. புன்னை
7. வாதுமை 8. இலந்தை 9. கொய்யா 10. கமுகு 11. பாக்கு 12. பலா
13. வேய் 14. மலைவேம்பு 15. வேலம் 16. எட்டி 17. காட்டுவாகை 18. யா