என்னப்பா, 27 திருமுறையாசிரியர்களில் யாருடைய பெயர்களையெல்லாம் உங்களால் வேட்டையாட முடிஞ்சுது? வேட்டையாட முடியாமல் விட்டுப்போன வார்த்தைகளை கீழேயுள்ள படத்தின் மூலம் தெரிஞ்சுக்கலாம் வாங்க!
பல தொலைக்காட்சிச் சேனல்களில், பல மொழிகளில் மகாபாரதத்தை ஒளிபரப்பிக்கிட்டுருக்காங்க. இதில் முக்கியமாகப் பேசப்படுபவர்கள் பஞ்சபாண்டவர்கள் மற்றும் கௌரவர்கள். பஞ்சபாண்டவர்களின் பெயர்கள் நம் எல்லோருக்கும் தெரிந்ததே. ஆனா, கௌரவர்களின் பெயர்கள் உங்களுக்குத் தெரியுமா? கௌரவர்கள் அப்படீன்னு சொன்னாலே நமக்கு ஞாபகம் வருவதென்னாவோ துரியோதனன், துச்சாதனன் பெயர்கள்தான். ஆனா, மீதமுள்ள 98 நபர்களின் பெயர்கள் என்னவா இருக்கும்? அத்தனை பெயர்களை நினைவு வெச்சுக்கறது அவ்வளவு சுலபமான்னு நீங்க யோசிப்பது எனக்குப் புரியுது. ஆனா, அவர்களுடைய பெயர்களைப் படித்துப் பார்த்தபோது அவ்வளவு கஷ்டமாத் தெரியலை. கௌரவர்களில் சிலருடைய பெயர்களை இந்த வார ‘வார்த்தை வேட்டை’க்காகத் தேர்ந்தெடுத்திருக்கிறோம். என்ன, இந்த வார ‘வார்த்தை வேட்டை’ வித்தியாசமா இருக்கா? வித்தியாசமா மட்டுமில்லை சுவாரசியமாவும் இருக்கும். என்ன, உங்களுடைய வேட்டையைத் தொடங்கியாச்சா?
“