என்ன நண்பர்களே, போன வாரம் கொடுக்கப்பட்ட விலங்குகளைக் கண்டுபிடிச்சு வேட்டையாட முடிஞ்சுதா? முள்ளம்பன்றி, வரிக்குதிரை, கடலாமை, காண்டாமிருகம், வெள்ளாடு, சிறுத்தைப்புலி, கீரிப்பிள்ளை, நீர்யானை, உடும்பு, வௌவால், காட்டுப்பன்றி அப்படீன்னு நேரிடையாக் கொடுக்கப்பட்டிருந்த விலங்குகளை எளிதாக வேட்டையாடிக் கண்டுபிடிச்சிட்டீங்க. ஆனா, ஒரு விலங்கு கொஞ்சம் சாய்வாக ஒளிந்திருக்கவும் உங்களால் வேட்டையாட முடியலையோ? விட்டுபோன விலங்கின் பெயரைச் சொல்லாமல் கதை பேசிக்கிட்டிருக்கியேன்னு மனசுல மட்டுமில்லாமல் வாய்விட்டும் நீங்க என்னைத் திட்டுறது எனக்குக் கேட்குது. கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் 12 விலங்குகளையும் குறியிட்டுக் காட்டியிருக்கேன். விட்டுப்போன விலங்கு எங்கேயிருக்குன்னு பார்த்துத் தெரிஞ்சுக்கோங்க! 12 விலங்குகளையும் சரியாகக் கண்டுபிடித்து பட்டியலிட்ட தீபாவிற்கு எங்களுடைய பாராட்டுக்கள்.
சரி, இந்த வார வார்த்தை வேட்டைக்குப் போகலாமா? இந்த வாரம் உங்களுக்காக நாங்க தேர்ந்தெடுத்திருக்கும் தலைப்பு விலங்குகள், பறவைகள் எழுப்பும் ஒலிப் பெயர்கள். விலங்குகள் கத்தும், பறவைகள் கூவும், இல்லையென்றால் பாடும் அப்படீன்னு பொதுவாக இல்லாமல், ஒவ்வொரு விலங்கும் பறவையும் எழுப்பும் ஒலிகளுக்குத் தனித்தனிப் பெயர்கள் இருப்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்னு சோதிச்சுப் பார்த்துடலாம்! போன வாரம் கொடுத்திருந்த விளையாட்டில் விலங்குகளின் எண்ணிக்கையைக் குறிப்பிட்டு வேட்டையாடச் சொல்லியிருந்தோம். இந்த வாரம் எண்ணிக்கையைச் சொல்லாமலேயே நீங்க எவ்வளவு விடைகளை வேட்டையாடுறீங்கன்னு பார்க்கலாமா? எப்பவும்போல, நீங்க கண்டுபிடிக்கும் விடைகளைக் கீழேயிருக்கும் பின்னூட்டப் படிவத்தில் இட்டு எங்களுக்கு அனுப்புவீங்கதானே?
அடுத்த வாரம் மற்றொரு தலைப்போடு உங்களைச் சந்திப்பது மட்டுமில்லாமல், இந்த வாரத்துக்கான விடைகளையும் சொல்கிறேன், வரட்டுமா?
“
விளையாட்டு நல்லாருக்கு யஷ். கலக்குங்க.
பிளிறல், ஊளையிடல், கொக்கரிப்பு, உறுமல், ரீங்காரம், அலப்பல், முக்காரம், எக்காளம், கதறல், அலறல்.
நன்றி ரிஷி.
கலக்குறீங்க அனி. ஆனால் இன்னும் சில வார்த்தைகள் ஒளின்திருக்கு. கண்டுவிடிங்க கண்டுபிடிங்க…
கர்ஜனை
சுவாரசியமா இருக்கு
நன்றி ரிஷபன் சார்.
பேசுதல்