போன வாரம் ‘வார்த்தை வேட்டை’க்காக நாங்க கொடுத்திருந்த தலைப்பு ‘கலைகள்’. அந்த வேட்டையின் மூலம் 64 கலைகளில் சில கலைகளோட பெயர்களை நீங்க தெரிஞ்சுக்கிட்டிருப்பீங்கன்னு நம்பறோம். உங்க வேட்டையில் விடுபட்டுப்போன வார்த்தைகளைக் கீழேயுள்ள படத்தைப் பார்த்துத் தெரிஞ்சுக்கோங்க!
சரி, இந்த வாரத் தலைப்பு என்னென்னு பார்க்கலாம் வாங்க! உடல் ஆரோக்கியங்கிறது நம்ம அன்றாட வாழ்க்கையின் ஓர் அங்கம் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. நாமும் இப்போ அதனுடைய முக்கியத்துவத்தை அறிஞ்சு, புரிஞ்சு நிறையக் கவனம் செலுத்துறோம். நம்முடைய உடல் ஆரோக்கியத்தைக் காக்கப் பலரும் பல வழிகளைக் கடைப்பிடிக்கிறோம். அதில் ரொம்பவும் பிரபலமான ‘யோகாசனம்’ சம்பந்தமான வார்த்தைகளைத்தான் இந்த வாரம் நீங்க வேட்டையாடப் போறீங்க. என்ன, உங்களுக்கு ரொம்பவும் பரிச்சயமான தலைப்புதானே? அப்புறம் எதுக்குக் காத்திருக்கணும்? வேட்டையை ஆரம்பிக்கலாமே!
“