என்னப்பா, எப்படிப் போச்சு போன வார வார்த்தைகளின் வேட்டை? அனியும், ஜெயந்தியும் அவங்க வேட்டையாடின வார்த்தைகளை நமக்கு அனுப்பியிருந்தாங்க. அவங்க மட்டுமில்லாமல் எல்லாரும் நீங்க கண்டுபிடிச்ச வார்த்தைகள் போக விடுபட்ட வார்த்தைகளைக் கீழேயுள்ள படத்தைப் பார்த்து தெரிஞ்சுக்கோங்க!
இந்த வார வார்த்தை வேட்டைக்கான தலைப்பு ‘வேதியியல்’. இப்போதெல்லாம் நம்முடைய உரையாடல்களில் இது மாதிரியான வார்த்தைகள் மட்டும்தான் அப்படின்னு இல்லாம பலதரப்பட்ட தலைப்பு சார்ந்த வார்த்தைகளையும் சர்வ சாதாரணமாக நாம உபயோகிக்கிறோம். அதுபோல வேதியியல் சம்பந்தமான நம் எல்லோருக்கும் தெரிஞ்ச பல வார்த்தைகள் இங்கே உங்களுடைய வேட்டைக்காகக் காத்திருக்கு. இனி எதுக்குக் காத்திருக்கணும்? வேட்டையை ஆரம்பிக்கலாமே!
“
1.உப்புமூலம்
2.கரைதிறன்
3.புடக்குகை
4.வலுவெண்
5.ஊதுலை
6.மூலக்கூறு
7.கொள்கலம்
8.எதிரயனி
9.அலோகம்
10.எரிகாரம்
11.உறிஞ்சி
12.பதங்கமாதல்
13.இரசவாதி
14.சாமணம்
15.சாகைதறி
அனி, நேன்க வஎட்டையாடிய வார்த்தைகளில் பதங்கமாதல், சாகைதறி தவிர மேதி வார்த்தைகள் சரியானவை. இன்னமும் சில வார்த்தைகள் மிஞ்சியிருக்குப்பா…