வாரம் ஒரு பக்கம் (4) – ரோகம் தீர்க்கும் ராகங்கள்

பண்டைய இசையில் 72 மேள கர்த்தா ராகங்களின் அடிப்படையில் இசை மருத்துவமுறைகளைச் சொல்லி இருக்கிறார்கள். அது என்ன மேளகர்த்தா ராகம்?…

ராகங்கள் எத்தனையோ இருந்தாலும் அவற்றுள் முதன்மையான 72 ராகங்களிலிருந்தே மற்ற பல ராகங்கள் பிறக்கின்றன. அவைதாம் மேளகர்த்தா ராகங்கள். பெற்றோர் ராகங்கள் (Parent Ragas) என்றும் கூறலாம். இந்த 72 மேளகர்த்தா ராகங்களும் நம் உடலின் 72 முக்கிய நரம்பு மண்டலங்களைக் கட்டுப்படுத்தும் சக்தி உடையனவாம். இதனால் ஒவ்வொரு ராகத்திற்கும் ஒவ்வொரு நோயைக் குணப்படுத்தும் சக்தி இருக்கிறது! அப்படிச் சில ராகங்களையும் அவை குணப்படுத்தும் நோய்களையும் பார்க்கலாம்:

ஆகிர்பரவி – அஜீரணம், ஹைபர்டென்ஷன் எனும் உயர் ரத்த அழுத்தம், மூட்டுவலிகள்.

பைரவி
– முட்டி மற்றும் முழங்கால் வலி.

சந்திரகௌன்ஸ்
– பசியின்மை.

தர்பாரிகானடா
– தலைவலி.

தீபக்
– அஜீரணம், பசியின்மை, நெஞ்செரிச்சல், குடற்கற்கள்.

ஜோன்புரி
– வாயுக்கோளாறு, வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல்.

ஜெய்ஜெய்வந்தி
– வயிற்றுப்போக்கு, தலைவலி, மூட்டுவலி.

மால்கௌன்ஸ்
– குடல்வாயு.

பூர்விகல்யாணி
– இரத்தச்சோகை, பதற்றம் (Tension), குடல் எரிச்சல்.

பூர்யதனஸ்ரீ
– இரத்தச்சோகை.

சோஹானி
– தலைவலி.

இந்த வார ‘ஊருக்கு உபதேசம்’!

அடுத்த முறை, தலைவலி மண்டையைப் பிளந்தால் மாத்திரையை விழுங்குவதற்குப் பதில் சோஹானி ராகத்தைப் பாடுங்க!

தலைவலி பறந்தோடிப் போகும் (உங்க பக்கத்து வீட்டுக்கு!).

(கர்நாடக இசை பற்றிய இணையத்தளங்களிலிருந்து நன்றியுடன்)

About The Author