வாங்கிபாத்தை மசாலாப்பொடிகள் இல்லாமல் சுவையாக தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள் :
பச்சை அல்லது வெள்ளைக் கத்தரிக்காய்கள் – 1/4 k.g ,
வெங்காயத்துண்டுகள் – ஒரு கப் ,
உதிரியாக வடித்த சாதம்- 2 கப் ,
சிகப்பு மிளகாய்த்தூள் – ஒரு தேக்கரண்டி,
தனியாத்தூள் – அரை தேக்கரண்டி,
சீரகத்தூள் – அரைத்தேக்கரண்டி ,
மஞ்சள் பொடி – 1/2 தேக்கரண்டி,
பொடி உப்பு – ஒரு தேக்கரண்டி,
கசூரிமேதி எனப்படும் வெந்தியக்கீரை (அ) ஆம்சூர் எனப்படும் உலர்ந்த மாங்காய்த்தூள் (அ) எலுமிச்சைச் சாறு தேவையான அளவு,
எள் எண்ணெய் – இரண்டு மேசைக்கரண்டி
தாளிக்க :
உளுத்தம்பருப்பு , கடலைப்பருப்பு, முந்திரித்துண்டுகள் – ஒரு மேசைக்கரண்டி ,
தேவையான அளவு – எள் எண்ணெய், சிறிது நெய்.
செய்முறை :
தேவையான அளவு சாதத்தை உதிரியாக வடித்துக் கொள்ளவும்.கத்தரிக்காய்களைக் கழுவி மெல்லிய இரண்டு அங்குலத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் நெய்யும், எண்ணெயும் ஊற்றி தாளிக்க வேண்டியவற்றை தாளித்து வெங்காயத்துண்டுகளைச் சேர்த்து பொன்னிறமாக வதக்கியபிறகு மெலிதாக நறுக்கிய கத்தரிக்காயைச் சேர்த்து வதக்கிய பிறகு பொடிகளையும் சேர்த்து கிளறி விட்டு விருப்பத்திற்கேற்ப தேவைக்கேற்ப எலுமிச்சைச்சாறோ, ஆம்சூரோ சேர்த்து சாதத்துடன் கலந்து சாப்பிடவும்.