வழி காட்டும் ஜோதிடம்!

மனித குலத்திற்கு பன்னெடுங்காலமாக ஜோதிடம் வழி காட்டி வந்து கொண்டிருக்கிறது. ஜோதிடத்தில் பஞ்சாங்கம் முக்கிய பங்கு வகிக்கும். காலத்தைக் கணக்கிட பஞ்சாங்கம் உதவுகிறது. பொதுவாக நாட்காட்டியில் பஞ்சாங்கத்தில் உள்ள 5 அங்கங்களான வாரம், திதி, நட்சத்திரம், யோகம், கரணம் ஆகியவற்றில் கரணம் தவிர நான்கு அங்கங்களைப் பற்றிய குறிப்பு இருக்கும்.

"ராஷ்ட்ரிய பஞ்சாங்க்" என்ற பஞ்சாங்கத்தை அகில இந்திய வானொலி நிலையம், அரசிதழ் (Gazette), நாட்காட்டி மற்றும் இந்திய அரசாங்கம் வெளியிடும் குறிப்புகள் அனைத்திலும் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த பஞ்சாங்கம் 1957 முதல் வெளியிடப்படுகிறது. ஆங்கிலம், ஹிந்தி தவிர அசாமீஸ், பெங்காலி, குஜராத்தி, கன்னடா, மலையாளம், மராத்தி, ஒரியா, பஞ்சாபி, சமஸ்கிருதம், தமிழ், தெலுங்கு, உருது ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது. இதில் 24 முக்கிய இடங்களின் சூரிய உதயம், சூரிய அஸ்தமனம், திதி, நட்சத்திரம், யோகம், மற்றும் கிரகங்களின் பாகை கலை முதலியவைகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

நாள் என்பது சூரிய உதயத்தை அடிப்படையாகக் கொண்டே அமைகிறது. எனவே பஞ்சாங்கத்தில், சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனம், சூரியன் மேஷம் முதல் மீனம் வரை ராசிகளில் எப்போது பிரவேசம் செய்கிறான் என்பது பற்றிய குறிப்புக்களும், பண்டிகைகள் மற்றும் விரதங்களை அறிய உதவும் சந்திரனின் சஞ்சாரம் பற்றிய குறிப்புக்களும் கொடுக்கப்பட்டிருக்கும்.

மனிதன் எந்த ஒரு செயலை தொடங்கும் போதும் அதன் மூலம் முழு பயனைப் பெற வேண்டும் என்று ஆசைப்படுவது இயல்பான ஒன்றாகும். அப்படி செய்யக்கூடிய காரியம் நன்கு நடைபெற உகந்த காலம், ஒரு நாளில் நன்மை செய்யக்கூடிய காலகட்டம் சுப காரியங்களுக்கு ஏற்ற நேரம்(முகூர்த்தம்), புதுத் துணி கோடி உடுக்க சரியான நேரம், புது ஆபரணங்களை அணிய மங்களகரமான நேரம், வாகனங்களை வாங்க உகந்த நேரம் – இப்படி பலவற்றிற்கும் வழிகாட்டுகின்றன கிரகங்கள்.

சொந்த வீட்டில் வசிக்க வேண்டும் என்று அனைவரும் ஆசைப்படுவது இயற்கையே. இருப்பிடமான அந்த வீட்டை எப்படி உகந்த முறையில் கட்ட வேண்டும் என்பதற்குரிய வாஸ்து செய்திகளும் பஞ்சாங்கத்தில் அடங்கியிருக்கும். அதனால்தான் ஒவ்வொரு வீட்டிலும் பஞ்சாங்கம் வாங்குவதோடு மட்டுமில்லாமல், சித்திரை மாதம் புத்தாண்டு பிறந்தவுடன் அதனைப் படிப்பதற்கும் ஒரு நல்ல நேரம் ஒதுக்கி வைத்துள்ளனர் நம் முன்னோர்கள்.

இப்படி நம் வாழ்வின் பல நேரங்களில், ஜோதிடம் நம் வாழ்வோடு பின்னிப் பிணைந்துள்ளது. அது நமக்கு வழி காட்டுகிறது. அதனால் ஜோதிடம் வேதத்தின் கண்ணாகக் கருதப்படுகிறது. ஆய கலைகள் அறுபத்து நான்கில் ஜோதிடமும் ஒன்றாகும்.
——————————————————————————–
திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன்,B.Sc. P.G.Dip. in journalism,
ஜோதிடர், எண் 8, 2 வது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச்சேரி – 605004.
செல்:(0) 99432-22022. (0)98946-66048. (0) 94875-62022.

About The Author

1 Comment

  1. nandini

    வணக்கம்.பஞ்சாங்கம் பற்றிய விளக்கம் மிக அருமை.
    விக்ருதி வருட வாக்கிய பஞ்சாங்கம் 2010-2011 இருந்தால்டவுன்லோடு செய்து அனுப்பி வைக்கவும் .நன்ற

Comments are closed.