ஆண்டவனின் தோட்டத்தில்
ஆண்டென்னும் பூச்செடியில்
அடுத்த மலரின் ஜனனம்! – அதை
ஆவலுடன் வரவேற்போம்!
கடந்த வருடத்தின்
கசப்பான நினைவுகளை
நெஞ்சம் மறக்கட்டும்.
அவற்றில் நாம் கற்ற
பாடம் மட்டும் நினைவில்
என்றும் இருக்கட்டும்!
அதிகாலை விடியலென
ஆனந்த பூபாளமென
அரும்பொன்று மலர்ந்து
ஆண்டாக விரிகிறது! – நம்
ஆசைகள் ஈடேற
ஆசி கொண்டு வருகிறது!
வருகின்ற புத்தாண்டு
வளம் சேர்க்கட்டும்!
வயலெல்லாம் விளைந்திருக்க
வாழ்வெல்லாம் உயர்ந்திருக்க
மனமெல்லாம் நிறைந்திருக்க
மங்கலமே நிலைத்திருக்க
வருகின்ற புத்தாண்டு
வளம் சேர்க்கட்டும்!
இறுதி வரிகளை கடக்கும் போது…தமிழ் புத்தாண்டு வந்ததோ என்று சுவற்று நாட்காட்டியை பார்த்தேன்.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்…
கருவெளி” ராச.மகேந்திரன்”