லக… லக… ஜோக்ஸ் (96)

நபர்: சார்! என்னோட பொண்ணைக் காலையிலேருந்து காணல! புகார் கொடுக்கணும்.

போலீஸ்: அதோ போறாரே, அவர்கிட்ட முதல்ல போய்ப் பேசுங்க!

நபர்: என்ன சார் நீங்க… பொண்ணக் காணலைன்னு சொல்றேன்… நீங்க என்னடான்னா அவர்கிட்ட போய்ப் பேசச் சொல்றீங்க? எதுக்கு நான் அவர்கிட்ட பேசணும்?

போலீஸ்: அவர்தான் உங்க சம்பந்தியா இருக்கணும். ஏன்னா, அவரோட பையனைக் காணோம்னு இப்போத்தான் புகார் கொடுத்துட்டு போறாரு. அதான்.

*****

தொண்டன்: தலைவரே அடிக்கடி நிதி கேட்க வேண்டாம்னு சொன்னேன், கேட்டீங்களா?

தலைவர்: ஏன், என்னாச்சு?

தொண்டன்: உங்களுக்கு தேர்தல்ல திருவோடு சின்னம் கொடுத்திருக்காங்க.

*****


கணவன்: அடியேய்! இவன்தான் உன் கள்ளக்காதலனா? பார்த்தா பிச்சைக்காரன் மாதிரி இருக்கான்.

மனைவி: தண்ணியப் போட்டுட்டு கண்ணாடி முன்னாடி நின்னு உளறாம போய்த் தூங்குங்க.

*****

நபர்-1: ஜோசியர் அப்பவே சொன்னாரு… யோகம் அடிக்கப் போகுதுன்னு. நான்தான் சரியா புரிஞ்சிக்கல.

நபர்-2: ஏன் லாட்டரி ஏதாவது மிஸ்ஸாயிடுச்சா?

நபர்-1: நீ வேற! என் பெண்டாட்டி பேரு யோகம். நேத்து சண்டைல என்னை அடி பின்னிட்டா.

*****

டாக்டர்: தூக்கத்திலே நடக்கிற வியாதிக்கு மருந்து கொடுத்தேனே… இப்போ எப்படி இருக்கு?

நோயாளி: பரவாயில்லே டாக்டர். இப்போல்லாம் தூக்கத்துல நடக்கிறதில்லே; ஸ்கூட்டரை எடுத்து ஒரு ரவுண்டு போயிட்டு வந்துடறேன்.

*****

About The Author