மகள் : அப்பா, நான் சாதிக்க விரும்பறேன்.
அப்பா : பொண்ணுங்கன்னா இப்படித்தான் இருக்கணும். எந்தத் துறையில சாதிக்க விரும்பறே?
மகள் : ஐயோ அப்பா… நான் எதிர் வீட்டுப் பையன் ‘சாதிக்’ கை விரும்பறேன்!
நடிகர் : நான் இனிமே நடிக்கப் போறதில்லை. பொதுசேவையில் என்னை ஈடுபடுத்திக்கலாம்னு இருக்கேன்.
நிருபர் : நடிக்கலைன்னு முடிவு பண்ணீங்க பாருங்க… அதுவே மிகப்பெரிய சேவைதாங்க.
நபர் 1 : நேத்து நீங்க காரில் போகும்போது விபத்தாயிடுச்சாமே.. எப்படி ஆச்சு ?
நபர் 2 : அதோ, அங்கே ஒரு மரம் இருக்கே உங்களுக்குத் தெரியுதா?
நபர் 1 : தெரியுதே!
நபர் 2 : அது நேத்து எனக்கு காரில் வரும்போது தெரியலைங்க!
கல்யாண மண்டபத்தில்,
நபர் 1 : வாங்க.. வாங்க.. நீங்க மாப்பிள்ளை வீட்டுக்காரங்களா? பொண்ணுவீட்டுக்காரங்களா?
நபர் 2 : நான் பொண்ணோட பழைய வீட்டுக்காரன்.
“