நிருபர்: உங்க வருங்காலக் கணவர் எப்படி இருக்கணும்னு நினைக்கிறீங்க?
நடிகை: நிகழ்காலக் கணவரை விட நல்லவரா இருக்கணும்னுதான்.
சர்வர் : சாப்பிட்டு முடிச்சுட்டீங்களா, பில் போடலாமா?
நபர் : வேண்டாம், கிரைண்டர்ல அரிசியப் போடுங்க!
சிறுவன் 1 : "எங்கப்பா ரொம்ப பயந்தாங்கொள்ளிடா"
சிறுவன் 2 : "எப்படிடா சொல்லுறே? "
சிறுவன் 1 : பின்னே என்னோட ரோடை க்ராஸ் பண்ணும் பொழுது என் கையை கெட்டியா பிடிச்சிக்கிறார்டா…
அப்பா : பக்கத்து வீட்டு பொண்ணு எவ்வளவு மார்க் வாங்கியிருக்கு. அவளைப் பார்த்தாவது நீ நல்லா படி.
மகன் : அய்யோ அப்பா! அவளைப் பார்த்துதான் நான் படிக்காம போனேன்.
நோயாளி: தினமும் ஒரு பச்சை முட்டை சாப்பிடனுமா… என்னால முடியாது டாக்டர்.
டாக்டர்: ஏன் முடியாது?
நோயாளி: ஏன்னா எங்க வீட்டு கோழி வெள்ளை முட்டைதான் போடும்!!!
“