தலைமை ஆசிரியர்: டேய்! எவன்டா தமிழ் ஆசிரியர் காலைப் பிடிச்சி வாரி விட்டது?
மாணவன்: சார்! நேத்து ஸ்கூல் விட்டதும் அவர்தான் "நாளை காலை வாருங்கள்"னு சொன்னார்
*****
மாணவன்: பரீட்சையில் பெயில் ஆனதுக்கு என்னோட மறதிதான் சார் காரணம்!
ஆசிரியர்: இப்பவாவது புரிஞ்சுதே!
மாணவன்: கையில பிட் இருந்தும் அடிக்கலைன்னா வேற என்ன சார் சொல்றது!
*****
நோயாளி: டாக்டர்! எனக்கு இந்த ஆபரேஷன் செஞ்சா மூட்டுவலி போயிடுமா?
மருத்துவர்: ஆபரேஷன்ல சிலருக்கு உயிரே போகும்போது மூட்டுவலி போயிடாதா என்ன?
*****
ஆசிரியர்: 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மன்னர்களைப் பத்தி உனக்குத் தெரிஞ்சத சொல்லு!
மாணவன்: அவங்க எல்லோரும் இறந்துட்டாங்க சார்!
*****
ஆசிரியர்: வரலாறு பாடத்தில ஏன் பெயில் ஆன?
மாணவன்: பழசை எல்லாம் மறந்துடணும்னு நீங்கதானே சார் சொன்னீங்க?
*****
“