லக… லக… ஜோக்ஸ் (87)

தேர்வாசிரியர்: என்னப்பா, எலெக்ட்ரிகல் இன்ஜினியரிங் படிச்சேங்கிற… கேட்டா ஒண்ணுமே தெரியலையே?

மாணவன்: என்ன பண்றது சார்… நான் படிச்ச வருஷம் பூராவும் கரண்ட் கட்!

==========

நண்பன்-1: என் ஆளுன்னு நினைச்சு யாரோ ஒருத்தியோட துப்பட்டாவ புடிச்சுட்டேன்.

நண்பன்-2: என்னாச்சு?

நண்பன்-1: துப்பிட்டா

==========

பிச்சைக்காரன்: தாயே மகாலட்சுமி! கண் தெரியாத குருடன். சோறு இருந்தாப் போடும்மா!

மனைவி: ஏங்க! இந்தாளுக்கு உண்மையிலேயே கண் தெரியாதா? இல்ல, பொய் சொல்றானா?

கணவன்: சே, சே! நிச்சயமா குருடன்தான்.

மனைவி: எப்படி சொல்றீங்க?

கணவன்: உன்னைப் பார்த்து மகாலட்சுமினு சொல்றானே!

==========

நண்பன்-1: சினிமா டைரக்டருக்கும், டாக்டருக்கும் என்ன ஒத்துமை?

நண்பன்-2: தெரியலையேடா!

நண்பன்-1: இரண்டு பேருமே ஏதோ ஒரு தியேட்டர்ல யாரையாவது போட்டு அறுத்துக்கிட்டு இருப்பாங்க.

==========

அம்மா: மகனே! என்னடா செல்லம் பண்ற?

மகன்: படிச்சிட்டு இருக்கேன்மா!

அம்மா: என்ன கண்ணா படிக்கிற?

மகன்: உன் மருமக அனுப்புன SMS-ஐதான்.

===========

About The Author