நபர்-1: சட்டை பொத்தான் போடறதையே ரெண்டு வாரமா காமிச்சாரே, அந்த மெகா சீரியல் டைரக்டரோட அடுத்த சீரியல் விறுவிறுப்பா இருக்குமாம்.
நபர்-2: எப்படி?
நபர்-1: பொத்தானுக்கு பதில் ‘ஜிப்’ வச்சுட்டாங்களாம்!
=====
நீதிபதி: பார்த்தா சின்னப் பையனா அப்பாவியா இருக்கே! நீயா பிக்பாக்கெட் அடிச்சே? நம்பவே முடியலை!
குற்றவாளி: உங்களை மாதிரிதாங்க எல்லோரும் ஏமாந்துடறாங்க.
=====
கான்ஸ்டபிள்: சார், பாங்க் கொள்ளை பத்தி ஒரு துப்பு கிடைச்சிருக்கு. கொள்ளை அடிச்சவன் கம்ப்யூட்டர் தெரிஞ்சவன்; நீதி நேர்மைக்கு கட்டுப்பட்டு நடக்கிறவன்.
இன்ஸ்பெக்டர்: எப்படிய்யா சொல்ற?
கான்ஸ்டபிள்: ஒவ்வொரு அக்கௌண்ட்ல இருந்தும் ஆயிரம் ரூபாய் கரெக்டா எடுத்துக்கிட்டு, அதை அக்கௌண்ட்ல கழிச்சு சரியா கணக்கை டாலி பண்ணிட்டு போயிருக்கான்.
=====
குற்றவாளி: என் வழியில் குறுக்கிட்டதாலதாங்க நான் போலீஸ்காரங்களை அடிச்சேன்.
நீதிபதி: எப்படி?
குற்றவாளி: ஜெயில்ல இருந்து தப்பி ஓடறப்போ தடுத்தாங்க.
=====
நபர்-1: தரையில தண்ணியாயிருக்கு. பார்த்து நடந்து போங்க. ஒருக்கால் வழுக்கினாலும் வழுக்கிடும்.
நபர்-2: அப்போ ரெண்டாவது கால் வழுக்காதா?
=====
“