இயக்குநர்: போன படத்தை விட இந்த படத்துல ஹீரோ கொஞ்சம் அதிகமாவே சாகசம் செய்யறார். ஆனாலும் படம் ஓடலை. இந்த மக்களை புரிஞ்சுக்கவே முடியலை!
நிருபர்: அப்படி என்ன அதிகமா சாகசம் செய்யறாரு?
இயக்குநர்: போன படத்துல கோயில் தூணை புடுங்கி வில்லங்களை அடிப்பாரு. இந்த படத்துல கோயிலையே புடுங்கி அடிக்கிறாரு!
=====
தொண்டன்-1: எங்க நிக்க வச்சாலும் நிப்பேன்னு தலைவர்கிட்ட சொன்னது தப்பாப் போச்சு!
தொண்டன்-2: ஏன், என்னாச்சு?
தொண்டன்-1: வீட்டு வாசல்ல செக்யூரிட்டியா நிக்க வச்சுட்டாரு.
=====
மாப்பிள்ளை: மாமா! கல்யாணத்துக்கப்புறம் வீட்டோட மாப்பிள்ளையா வர என் தன்மானம் இடம் கொடுக்காது.
மாமா: சரி மாப்பிள்ளை, என்ன செய்யலாம்?
மாப்பிள்ளை: உங்க வீட்டை வித்து பணத்தை எங்கிட்டே குடுத்துடுங்க. புது வீடு வாங்கிக் குடி போயிடலாம்.
=====
தொண்டன்-1: தலைவர் எதுக்கு அனாவசியமா சலூன் போகும்போதெல்லாம் தொண்டர்களையும் கூட்டிட்டுப் போறார்?
தொண்டன்-2: முடி வெட்டறதுக்கு முன்னாடி துண்டு போர்த்துவாங்கயில்ல, அப்போ கை தட்டுறதுக்குத்தான்.
=====
நிருபர்: ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி ரெண்டுக்கும் பொதுவான விஷயம் ஒண்ணு இருக்குன்னு அன்னிக்கு மீட்டிங்ல பேசினீங்களே, அது என்ன?
அரசியல்வாதி: மக்களோட பணம்!
=====
“