நபர் – 1: அந்த ஆள் ரொம்ப சிக்கனப் பேர்வழி. எப்ப மார்க்கெட்டுக்குப் போனாலும் வாழைப்பழம்தான் வாங்குவாரு.
நபர் – 2: ஏன்?
நபர் – 1: அதானே சீப்பா கிடைக்கும்?
******
தொண்டன்: எங்க தலைவர் ஒரு திறந்த புத்தகம் மாதிரி.
நபர்: ஓ! அதான் நேத்து ரோட்டிலே போட்டு ஆளாளுக்குப் புரட்டி எடுத்தாங்களா?
******
நபர் – 1: எத்தனை பெரிய ஆபத்து வந்தாலும் யானை, குதிரை எல்லாம் கத்தாது.
நபர் – 2: ஏன்?
நபர் – 1: ஏன்னா யானை பிளிறும், குதிரை கனைக்கும்.
******
நபர் – 1: திருநெல்வேலி வரன் ஒண்ணு உங்க பொண்ணுக்கு வந்ததே, என்ன ஆச்சு?
நபர் – 2: கடைசி நேரத்துல மாப்பிள்ளை வீட்டுக்காரங்க அல்வா கொடுத்துட்டாங்க.
******
நண்பன் – 1: படகுல ஏறி பார்க்கலாமா?
நண்பன் – 2: முடியாதே! ஏரியிலதான் படகைப் பார்க்கலாம்.
******
“