நபர் – 1 : நேத்து ராத்திரி என் வீட்டுக்கு ஒரு திருடன் வந்து திருடுறதுக்கு முயற்சி பண்ணிக்கிட்டு இருந்தான்.
நபர் – 2: ஐயய்யோ! அப்புறம்…?
நபர் – 1 : எல்லா விளக்கையும் போட்டு நானும் அவன் கூடச் சேர்ந்து பணத்தைத் தேடினேன்.
நபர் – 2 : என்னது!
நபர் – 1 : ஆனாலும், கடைசி வரைக்கும் என் வீட்டுக்காரி பணத்தை எங்கே வெச்சிருக்கான்னு எங்களாலே கண்டுபிடிக்கவே முடியலை.
************
டாக்டர் : எப்படியிருக்கு உங்க தலைவலி?
நோயாளி : அவ வெளியூர் போயிருக்கா டாக்டர்.
************
திருடன் ஒரு வீட்டிற்குள் நுழையும்போது அவன் கால் பட்டுச் சத்தம் உண்டாகிறது.
வீட்டுக்காரர் : யாரு?
திருடன் : மியாவ்!
வீட்டுக்காரர் : யாரது?
திருடன் : மியாவ்!
வீட்டுக்காரர் : அட யாரது?
திருடன் : அட, காது கேக்கலியா? பூனைடா டேய்!
************
நண்பன் – 1 : மச்சி! நான் புது வருஷப் பார்ட்டிக்கு போலாம்னு இருக்கேன். நீயும் வர்றியா?
நண்பன் – 2 : கண்டிப்பா வர்றேன்டா! என்னிக்குன்னு சொல்லு, கலக்கிடலாம்.
************
“
நல்ல நகைச்சுவைகள்! நானும் ஒன்று சொல்கிறேன் கேட்கிறீர்களா?
“ நாளை புதுமைப் பித்தன் நூற்களைப் பாராட்டி ஒரு கூட்டம் வைத்துள்ளோம்! அவசியம் வரவேண்டும்!”
‘’அப்படியா? புதுமைப்பித்தனும் வருவாரில்லையா?”
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை௩3